‘கிளாடியேட்டர்ஸ்’ ட்ரெய்லர் ரிலீஸ்..; திரையரங்கில் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்

‘கிளாடியேட்டர்ஸ்’ ட்ரெய்லர் ரிலீஸ்..; திரையரங்கில் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்

 

‘கிளாடியேட்டர்ஸ்’ ட்ரெய்லர் ரிலீஸ்..; திரையரங்கில் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்

 

ஒவ்வொரு திரைப்படங்களையும் முடித்துவிட்டு ஓய்வெடுக்காமல் அடுத்ததாக பைக் ரேஸ், கார் ரேஸ், துப்பாக்கி சுடுதல் என பிசியாக இருப்பவர் தல அஜித்.

‘குட் பேட் அக்லி’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணைகிறார் அஜித்.. இந்தப் படத்திற்கு ‘டேர்டெவில்’ என்று பெயரிடப்பட்டு அஜித்தின் மனைவி ஷாலினி தயாரித்து வருகிறார்..

ஒரு பக்கம் சினிமா ஷூட்டிங் என பிசியாக இருந்தாலும் மறுபக்கம் தனது சொந்த அணியான ‘அஜித்குமார் ரேசிங்’ மூலம் சர்வதேச தொடர்களில் பங்கேற்று வருகிறார்.. மேலும் இந்தியாவுக்கு பெருமை சேர்த்து வருகிறார்..

இந்த நிலையில் அஜித்தின் சர்வதேச மோட்டார் ஸ்போர்ட்ஸ் பயணத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘கிளாடியேட்டர்ஸ் – இன் பர்சூட் ஆஃப் சேலஞ்சஸ்’ ஆவணப்படத்தை இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கியுள்ளார்.

இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இதன் ட்ரெய்லர் இன்று செப்டம்பர் 6ஆம் தேதி மாலை 6.40 மணிக்கு திரையரங்குகளில் வெளியாகி உள்ளது…

‘கிளாடியேட்டர்ஸ்’ டிரெய்லரை காண இயக்குநர்கள் ஏ.எல். விஜய், ஆதிக் ரவிச்சந்திரன், சிறுத்தை சிவா ஆகியோர் திரையரங்கிற்கு சென்று அஜித் ரசிகர்களுடன் பார்த்து மகிழ்ந்துள்ளனர்..

அஜித்தின் மோட்டார் ஸ்போர்ட்ஸ் பயணம், அவர் சந்தித்த சவால்கள் மற்றும் கார் ரேஸ் ஈடுபாடு ஆகியவை இடம் பெற்றுள்ளது..

இந்த ஆவணப் படத்தை அஜித் மனைவி ஷாலினியே தயாரித்துள்ளார்..

 

Ajith in Gladiators trailer released in theatres