LOVE TODAY ‘வாலாட்டி’-யில் வளர்ந்த காதல்..; இயக்குனரை காதலிக்கும் ரவீனா ரவி

LOVE TODAY ‘வாலாட்டி’-யில் வளர்ந்த காதல்..; இயக்குனரை காதலிக்கும் ரவீனா ரவி

 

 

LOVE TODAY ‘வாலாட்டி’-யில் வளர்ந்த காதல்..; இயக்குனரை காதலிக்கும் ரவீனா ரவி

 

 

ரசிகர்களுக்கு முகத்தை காண்பிக்காமல் பாட்டு பாடித்தான் கவர முடியும் என்பதில்லை வசனங்களைப் பேசிக் கூட ரசிகர்களை என்னால் ஈர்க்க முடியும் என நிரூபித்தவர் டப்பிங் கலைஞர் ரவீனா ரவி.. இவர் பிரபல நடிகையும் டப்பிங் கலைஞருமான ஸ்ரீஜா ரவியின் மகள் ஆவார்..

தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட பல மொழி படங்களில் முன்னணி நடிகைகளுக்கு ஆஸ்தான டப்பிங் வாய்ஸ் ரவீனா தான்.

விக்ரம் நடித்த ‘ஐ’ படத்தில் நாயகி எமி ஜாக்சனுக்கு குரல் கொடுத்திருந்தார்.. அந்த குரல் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது குறிப்பிடத்தக்கது.

‘ஒரு கிடாயின் கருனை மனு’ படத்தின் மூலம் நடிகையாகவும் எண்ட்ரி கொடுத்தார். பின்பு லவ் டுடே, மாமன்னன், வட்டார வழக்கு, வீரமே வாகை சூடும் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார் ரவீனா..

தாயும் மகளும் டப்பிங் கலைஞராகவும் நடிகையாகவும் தென்னிந்திய சினிமாவில் தற்போது கலக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் தனது காதலரை தன் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார் நடிகை ரவீனா.. மலையாள இயக்குநர் தேவன் என்பவரை காதலிப்பதாகவும் அவருடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து அறிவித்துள்ளார்.

இயக்குநர் தேவன் மலையாளத்தில் சில மாதங்களுக்கு முன்பு வெளியான ‘வாலாட்டி’ படத்தின் மூலம் அறிமுகமானார். தற்போது ‘பைங்கிலி’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இவருக்கும் ரவீனா ரவிக்கும் விரைவில் திருமணம் நடக்கவுள்ளதாக கூறப்படுகிறது…

Actress Raveena Ravi love with director Devan

Raveena Ravi, known for her dubbing work in South Indian films, has confirmed her relationship with Malayalam director Devan Jayakumar on social media. The couple’s romance reportedly blossomed during their collaboration on the Malayalam movie ‘Vaalaatti’