ஒரு தேசிய விருது கூட கிடைக்கல… வருத்தமும் இல்ல.. –  இசையமைப்பாளர் தேவா

ஒரு தேசிய விருது கூட கிடைக்கல… வருத்தமும் இல்ல.. –  இசையமைப்பாளர் தேவா

 

ஒரு தேசிய விருது கூட கிடைக்கல… வருத்தமும் இல்ல.. –  இசையமைப்பாளர் தேவா

 

 

இளையராஜா கங்கை அமரன் குடும்பத்தைப் போல இசையமைப்பாளர் தேவா குடும்பத்தையும் இசை குடும்பம் என்று சொன்னால் அது மிகையல்ல..

ஏனென்றால் தேவா குடும்பத்தில் மட்டும் கிட்டத்தட்ட ஏழு இசையமைப்பாளர்கள் உள்ளனர்..

தேவா, ஸ்ரீகாந்த் தேவா, சபேஷ், முரளி, சிவா, போபோ சசி, ஜெய், ஆகிய 7 இசையமைப்பாளர்கள் உள்ளனர்.

இவர்களில் தேவா மட்டும் 500 படங்களுக்கும் மேல் இசையமைத்துள்ளார்.

இவரின் மகன் ஸ்ரீகாந்த் தேவா 120 படங்களுக்கு இசையமைத்துள்ளார்..

ரஜினி கமல் விஜய் அஜித் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் படங்களுக்கு தேவா இசை அமைத்திருக்கிறார்.. மாநில அரசின் பல விருதுகளை வென்று இருக்கிறார்..

1995ஆம் ஆண்டில் ஒரே ஆண்டில் பாட்ஷா மற்றும் ஆசை என்ற இரண்டு படங்களுக்காக விருதை பெற்றார்..

ஆசை படத்திற்காக தமிழக அரசின் விருது, பாட்ஷா படத்திற்காக தமிழ்நாடு கலை மற்றும் கலாச்சார அகாடமி விருதைப் பெற்றார்.

மேலும் ‘சிவப்பு மழை’ படத்திற்காக கின்னஸ் உலக சாதனை, சினிமா எக்ஸ்பிரஸ். பிலிம்பேர் உள்ளிட்ட விருதுகளையும் பெற்றுள்ளார்..

கலைமாமணி விருதும் பெற்று இருக்கிறார்.. ஆனால் இதுவரை இவருக்கு தேசிய அளவில் விருது எதுவும் கிடைக்கவில்லை..

இது குறித்து சமீபத்திய பேட்டியில் தேவா கூறியதாவது…

“என் இசை பயணத்தில இதுவரை தேசிய விருது கிடைக்கவில்லை. இந்த விருதுக்காக 6 முறை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. எனக்கு எந்த வருத்தமும் இல்லை.

என் மகன் ஸ்ரீகாந்த் தேவாவுக்கு விருது கிடைத்திருப்பது எனக்கு பெருமை” என்று கூறியுள்ளார்.

2021-ம் ஆண்டு ‘கருவறை’ என்ற குறும்படத்திற்காக ஸ்ரீகாந்த் தேவாவுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது..

சமீபத்தில் ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்தில் தேவாவுக்கு மரியாதை தரப்பட்டு, அவைத்தலைவர் இருக்கையில் அமரவும் வாய்ப்பு அளிக்கப்பட்டு, செங்கோலும் வழங்கப்பட்டுள்ளது என்பது இங்கே கவனிக்கத்தக்கது..

 

Music Composer Deva reactions for No national award