கதை நாயகனாக அறிமுகமாகும் பன்முக கலைஞர் கங்கை அமரன்

கதை நாயகனாக அறிமுகமாகும் பன்முக கலைஞர் கங்கை அமரன்

கதை நாயகனாக அறிமுகமாகும் பன்முக கலைஞர் கங்கை அமரன்

 

தமிழ் சினிமா மறக்க முடியாத ‘கரகாட்டக்காரன்’ என்ற படத்தை இயக்கியவர் கங்கை அமரன்.. இன்று அளவிலும் ரசிகர்களால் முணுமுணுக்கப்படும் வாழ்வே மாயம் படத்தில் இடம்பெற்ற பாடல்களுக்கு இசையமைத்தவர் கங்கை அமரன்.

இசையமைப்பாளர், இயக்குனர் நடிகர் என பன்முக திறமை கொண்ட கலைஞர் இவர் ஒரு சில படங்களில் சின்ன வேடத்தில் நடித்திருக்கிறார்..

 

இவரது மகன் வெங்கட் பிரபு பிரபலமான இயக்குனராக இருந்தாலும் அவரது படங்களில் நாயகனாக நடிக்கவில்லை.. கங்கை அமரன் இயக்கத்தில் கூட அவரை நாயகனாகவும் நடிக்கவில்லை.

இந்த நிலையில் தற்போது கதையின் நாயகனாக மாறியிருக்கிறார் கங்கை அமரன்

முதன்முறையாக ‘லெனின் பாண்டியன்’ என்ற படத்தில் கதைநாயகன் கங்கை அமரன். துரைராசு என்ற கேரக்டரில் நடிக்கிறார்.

நடிகர் சிவாஜி கணேசனின் பேரன் தர்ஷன் (ராம்குமார் மகன்) இப்படத்தில் நாயகனாக அறிமுகமாகிறார்..

டிடி பாலச்சந்திரன் என்பவர் இந்தப் படத்தை எழுதி இயக்க சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கிறது..

 

Gangei Amaran as lead in Lenin Pandiyan