இனி கேரக்டர் பெயரே என் கேரியர்..; நடிகர் சாம்ஸ் தன் பெயரை மாற்றிக் கொண்டார்
இனி கேரக்டர் பெயர் என் கேரியர்..; நடிகர் சாம்ஸ் தன் பெயரை மாற்றிக் கொண்டார்
தமிழ் சினிமாவில் முக்கியமான காமெடி நடிகர்கள் ஒருவர் சாம்ஸ்.
இவரின் டைமிங் காமெடி ரசிகர்கள் மத்தியில் பிரபலம்.. இதுவரை 230+ மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
இந்த நிலையில் இவர் தனக்கு வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்திய ‘கடவுள் அறை எண் 365 என்ற படத்தில் என்ற படத்தில் ஜாவா சுந்தரேசன் என்ற கேரக்டர் பெயரை தன்னுடைய பெயராக மாற்றிக் கொண்டுள்ளார்..
இன்றும் ரசிகர்கள் என்னை ஜாவா சுந்தரேசன் என்று அழைக்கின்றனர்.. எனவே எனவே நானும் அந்த பெயரை மாற்றிக் கொள்ள முடிவு செய்துள்ளேன் என தெரிவித்துள்ளார்..
அந்தப் படத்தில் எனக்கு வாய்ப்பளித்த இயக்குனர் சிம்பு தேவன் தயாரிப்பாளர் ஷங்கர் இருவருக்கும் நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.. இவரின் இயற்பெயர் சுவாமிநாதன் என்பது குறிப்பிடத்தக்கது..

சமீபத்தில் நடிகர் ஜெயம் ரவி அவரது பெயரை ரவி மோகன் என மாற்றிக் கொன்றார் அதுபோல நடிகர் அபி சரவணன் தன் பெயரை விஜய் விஸ்வா என மாற்றிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது..
Actor Chaams changed his name to Jawa Sundaresan

