‘சக்தித் திருமகன்’ கதை எனக்கு புரியல..; இயக்குனரை கலாய்த்த விஜய் ஆண்டனி
‘சக்தித் திருமகன்’ கதை எனக்கு புரியல..; இயக்குனரை கலாய்த்த விஜய் ஆண்டனி
அருண் பிரபு இயக்கத்தில் விஜய்ஆண்டனி நடிக்கும் ‘சக்தித் திருமகன்’ பட நிகழ்ச்சி சென்னையில் நடந்தது..
இந்தப் படம் செப்டம்பர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது..
அதில் பேசிய நடிகர் விஜய்ஆண்டனி… ”19 படங்களில் ஹீரோவாகவும், சில படங்களில் கவுரவ வேடத்தில் நடித்து இருக்கிறேன். ஆக இது 25வது படம்..
சசி இயக்கத்தில் உருவாகும் ‘நூறுசாமி’ படம் பெரியளவில் பேசப்படும்..
மேலும் தொடர்ச்சியாக படங்களை தயாரித்து வருகிறேன்.. என் பட நிறுவனத்தை பப்ளிக் லிமிடட் கம்பெனியாக மாற்றப்போகிறேன்..
நான் தயாரிக்க இருந்த படங்களில் மற்ற நடிகர்கள் நடிக்க முடியாத காரணத்தால் நான் நடிகர் ஆனேன்..
எனக்கு சினிமாவில் நடிப்பதை விட, படம் டைரக்ட் செய்ய, இசையமைக்கவே ஆர்வம் அதிகம்…
‘சக்தித் திருமகன்’ படத்தை ‘அருவி, வாழ்’ படங்களின் இயக்குனர் அருண்பிரபு இயக்கி உள்ளார்..
இந்த படம் குறித்து விஜய்ஆண்டனி பேசும் போது… ”அரசியல் விஷயங்களை நேரடியாக பேசும் படம் இது..
ஆனால் இந்த பட பிற்பாதி கதை எனக்கு புரியவில்லை.. பின்னர் கதை விளக்கினார். அடுத்தும் அவர் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கப் போகிறேன்” என்று பேசினார்..
Vijay Antony funny speech about Sakthi Thirumagan Director

