கும்பமேளா அழகி மோனாலிசா நினைவு இருக்கா.? தமிழ் சினிமாவை நெருங்குகிறார்.?!
கும்பமேளா அழகி மோனாலிசா நினைவு இருக்கா.? தமிழ் சினிமாவை நெருங்குகிறார்.?!
வட இந்தியாவில் சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற கும்பமேளா நிகழ்ச்சியை யாரும் மறந்திருக்க முடியாது.. அதே நேரம் அந்த கும்பமேளாவில் பாசிமணி விற்கும் மோனலிசாவை எவராலும் நிச்சயமாக மறக்க முடியாது..
அழகிய காந்த கண்களால் அனைவரையும் கவர்ந்த இவருக்கு பல தொல்லைகள் ஏற்பட்டது.. இவரை செல்பி எடுக்க கும்பமேளாவில் குவிந்தனர் ரசிகர்கள் கூட்டம்..
இதனையடுத்து இவர் தன்னுடைய சொந்த கிராமத்திற்கே ஓடிவிட்டார்.. ஆனாலும் இவரை பல சினிமா வாய்ப்புகள் துரத்திய வண்ணம் இருந்த நிலையில் மணிப்பூர் டைரி என்ற படத்தில் நடிக்க பாலிவுட் இயக்குனர் ஒப்பந்தம் செய்தார.
தற்போது தென்னிந்திய சினிமாவில் நடிக்க ஒப்பந்தமாக இருக்கிறார் மோனலிசா..
மலையாளத்தில் அறிமுகமாகும் இந்தப் படத்துக்கு ‘நாகம்மா’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இதனை பினு வர்கீஸ் என்பவர் இயக்க ஜீலி ஜார்ஜ் தயாரிக்கிறார்.
‘நீலதாமரை’ படத்தில் நடித்த கைலாஷ் இதில் நாயகனாக நடிக்கிறார்.
‘நாகம்மா’ படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் இறுதியில் தொடங்கும் என தெரியுகிறது..
அப்புறம் என்ன… மலையாள கரையோரம் வந்த இந்த மோனலிசா இனி தமிழ் சினிமாவில் கால் பதிக்க மாட்டாரா.. என்ன?
காத்திருப்போம் ரசிகர்களே…!
Khumbamela Fame Monalisa enters South Indian Cinema

