‘கூலி-ய பத்த வெச்சிட்டியே அனிருத்..; பட்டைய கிளப்பும் ரஜினியின் ‘பவர் ஹவுஸ்’ பாட்டு
‘கூலி-ய பத்த வெச்சிட்டியே அனிருத்..; பட்டைய கிளப்பும் ரஜினியின் ‘பவர் ஹவுஸ்’ பாட்டு
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில்
ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘கூலி’.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி இந்தப் படம் வெளியாக உள்ள நிலையில், இந்தப் படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடலான ‘பவர் ஹவுஸ்’ பாடலின் லிரிக்கல் வீடியோவை வெளியிட்டுள்ளனர்..
ஏற்கெனவே இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள ‘Chikitu’ மற்றும் ‘மோனிகா’ பாடல்களின் லிரிக்கல் வீடியோவை வெளியிட்டுள்ளனர்..

பவர் ஹவுஸ் பாடலை அறிவு எழுதி, அனிருத் உடன் இணைந்து பாடியுள்ளார்.
இதில் உள்ள வரிகள் வழக்கம் போல ரஜினியை புகழும் வகையில் அமைந்துள்ளது.. ரஜினிகாந்தை போற்றும் ‘கெட்ட பையன் டா’, ‘பத்த வெச்சிட்டயே பரட்ட’ என ரஜினி பட வசனங்கள் சிலவும் இதில் இடம்பெற்றுள்ளது..

இது ரஜினி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.. பலரும் அனிருத்தை பாராட்டி வருகின்றனர்..
Coolie movie 3 songs released Rajini fans Happy

