சிவக்குமார் / கமலை கூப்பிட்டுருக்கலாம்.. ஸ்லோ மோஷன் நடக்கிற என்னையே ஏன் கூப்பிட்டீங்க.. – ரஜினி
சிவக்குமார் / கமலை கூப்பிட்டுருக்கலாம்.. ஸ்லோ மோஷன் நடக்கிற என்னையே ஏன் கூப்பிட்டீங்க.. – ரஜினி
பிரபல எழுத்தாளரும் CPIM கட்சியின் எம்.பியுமான சு.வெங்கடேசன் எழுதிய புத்தகம் ‘வீரயுக நாயகன் வேள்பாரி புத்தகம்’.
இந்த புத்தகம் ஒரு லட்சம் பிரதிகளைத் தாண்டி விற்பனையில் சாதனை படைத்துள்ளது..
இந்த நிலையில், வேள்பாரி புத்தகத்தின் வெற்றிப் விழா சென்னையில் நடைபெற்றது..
இந்த நிகழ்ச்சியில், ‘வேள்பாரி 1,00,000’ லோகோ சின்னத்தை ரஜினிகாந்த் திறந்து வைத்து பேசினார்..

அவர் பேசியதாவது…
“இந்த விழாவுக்காக சு.வெங்கடேசன் என்னை அப்ரோச் செய்தார்..
விகடனில் அதிகம் கிழித்தது என்னைத்தான்.. இருந்தாலும் எங்கள் நட்பில் எந்த விரிசலும் இல்லை..
ஒரு வேளை இந்த விழாவிற்கு நடிகரை அழைக்க வேண்டுமானால் சிவக்குமாரை அழைத்திருக்கலாம். அவர் எவ்வளவு படித்திருக்கிறார், மகாபாரதத்தை இந்த வயதிலும் 6 மணி நேரம் விடாமல் பேசுகிறார்… ஹேட்ஸ் ஆஃப் டூ ஹிம்.
சரி அவர் வேண்டாம்.. நடிகர் கமல்ஹாசனை அழைத்திருக்கலாம்.. எவ்வளவு அறிவாளி..

அதை விட்டுவிட்டு 75 வயதில் கூலிங் கிளாஸ் போட்டுக்கிட்டு ஸ்லோ மோஷனில் நடந்து வரும் என்னை ஏன் கூப்பிட்டாங்க தெரிய.” என நகைச்சுவையாக ரஜினிகாந்த் பேச சிரிப்பலையால் அரங்கம் நிரம்பியது..
Rajinikanth funny speech at Velpaari book record sales

