கடவுளே நடித்தாலும் படம் ஓடாது..; ‘மார்கன்’ பட சக்சஸ் விழாவில் விஜய் ஆண்டனி பேச்சு

கடவுளே நடித்தாலும் படம் ஓடாது..; ‘மார்கன்’ பட சக்சஸ் விழாவில் விஜய் ஆண்டனி பேச்சு

கடவுளே நடித்தாலும் படம் ஓடாது..; ‘மார்கன்’ பட சக்சஸ் விழாவில் விஜய் ஆண்டனி பேச்சு

 

 

சூப்பர் ஹிட்டான பல படங்களுக்கு எடிட்டராக பணிபுரிந்தவர் லியோ ஜான் பால்.. இவரது இயக்கத்தில் விஜய் ஆண்டனி, பிரிகிடா, சமுத்திரக்கனி ஆகியோர் நடிப்பில் கடந்த வாரம் ஜூன் 27 ஆம் தேதி வெளியான படம் ‘மார்கன்’.

இப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் இன்று ( ஜூலை 1) நடைபெற்றது..

 

இதில் பேசிய விஜய் ஆண்டனி…

“இந்தப் படம் எனக்கு ரொம்ப ஸ்பெஷலானது.. நிறைய வெற்றி படங்கள், தோல்வி படங்களைக் கொடுத்திருக்கிறேன்.

எந்த ஒரு படமாக இருந்தாலும் ஹீரோவால் படம் ஓடாது. கடவுளே வந்து நடித்தால் கூட ஓடாது. இயக்குநரின் இயக்கமும், எழுத்தும் உறுதியாக இல்லையென்றால் எந்த படமும் ஓடாது.

அதனால் நான் எந்தப் படத்தில் நடித்தாலும் அதற்கான அங்கீகாரத்தை இயக்குநருக்குதான் கொடுப்பேன்.

இந்தப் படம் ஓடியதற்கு முழு காரணம் இயக்குநர் லியோ ஜான் தான்.

அவருடைய வேலைக்கு உண்மையாக இருந்திருக்கிறார். ஒரு இயக்குநராகவும், எடிட்டராகவும் உண்மையாக இருப்பார். இந்தப் படத்தில் பணியாற்றிய எல்லோருக்கும் நன்றி..

நான் எவ்வளவு படம் நடித்திருந்தாலும் சரி, இனிமேல் எவ்வளவு படங்கள் நடித்தாலும் சரி ‘பிச்சைகாரன்-1’ படத்திற்கு சமமாக எந்தப் படமும் இருக்க முடியாது.

சசி சார் அந்தக் கதையைச் சொல்லி முடித்தப் பிறகு அழுதேன். இதுவரைக்கும் யாருமே சொல்லாத ஒரு விஷயத்தை அடுத்தப் படத்தில் சசி சார் சொல்ல இருக்கிறார்.. அதில் என் தங்கை மகன் அஜய் தீஷன் நடிக்கிறார்.. ஒரு வாய்ப்பு அவனுக்கு கிடைக்காது..

அடுத்ததாக ‘சக்தி திருமகன்’ படம் வெளியாக இருக்கிறது. தொடர்ந்து ‘லாயர்’ படத்தின் வேலைகள் நடந்துக் கொண்டிருக்கிறது. சந்தோஷமாக இருக்கிறது” என்று பேசினார் விஜய் ஆண்டனி.

If Story and direction is not good even God as hero movie will be flop says Vijay Antony

—-