வாரிசுகளை களமிறக்கும் டைரக்டர் பார்த்திபன் மற்றும் நடிகை ஊர்வசி
வாரிசுகளை களமிறக்கும் டைரக்டர் பார்த்திபன் மற்றும் நடிகை ஊர்வசி
சினிமாவில் சாதித்த கலைஞர்களின் வாரிசுகள் வருவது வாடிக்கையான ஒன்றுதான்.. சிவாஜி கணேசன் குடும்பம் விஜயகுமார் குடும்பம் பாக்யராஜ் குடும்பம் டி ராஜேந்தர் சத்யராஜ் ரஜினிகாந்த் கமல்ஹாசன் உள்ளிட்ட பல கலைஞர்களை சொல்லிக் கொண்டே போகலாம்..
அந்த வரிசையில் தற்போது நடிகரும் இயக்குநருமான பார்த்திபனின் மகன் ராக்கி என்பவர் இயக்குனராக களம் இறங்க உள்ளார்.
தனது மகன் ராக்கி, திரு. ஏகாவிடம் ஒளிப்பதிவும், இயக்குநர் விஜய்யிடம் இயக்கமும் கற்றுக்கொண்டதாகத் தெரிவித்துள்ளார். ஒரு திரில்லர் படத்திற்கான கதையை உருவாக்கி இயக்கக் காத்திருக்கிறார் என்றும் அதில் நடிக்க தனக்கும் வாய்ப்பளிப்பதாகக் தெரிவித்துள்ளார் பார்த்திபன்..
அதுபோல பிரபல நடிகை ஊர்வசியின் மகள் தேஜலட்சுமியும் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.
‘சுந்தரியாயவள் ஸ்டெல்லா’ என்ற மலையாளப் படத்தில் அறிமுகமாவதாக சில நாட்கள் முன்பு ஊர்வசியின்முன்னாள் கணவரும் நடிகருமான மனோஜ் கே. ஜெயன் அறிவித்தார்.
Parthiban son Rakki and Urvasi daughter Tejalakshmi debut movies

