‘பரியேறும் பெருமாள்’ படத்தை நிராகரித்த அதர்வா..; DNA விழாவில் ஓபனாக பேசிய மாரி

‘பரியேறும் பெருமாள்’ படத்தை நிராகரித்த அதர்வா..; DNA விழாவில் ஓபனாக பேசிய மாரி

‘பரியேறும் பெருமாள்’ படத்தை நிராகரித்த அதர்வா..; DNA விழாவில் ஓபனாக பேசிய மாரி

 

‘ஒரு நாள் கூத்து’ & ‘மான்ஸ்டர்’ உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் கவனம் பெற்றவர் இயக்குனர் நெல்சன் வெங்கடேசன்.

தற்போது இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் டி என் ஏ.

இதில் அதர்வா & மலையாள நடிகை நிமிஷா சஜயன் ஜோடியாக இணைந்து நடித்துள்ளனர்..

‘டி.என்.ஏ’ படம் வரும் ஜூன் 20-ந் தேதி வெளியாக உள்ளது. இதில் இடம்பெற்றுள்ள 5 பாடல்களும் 5 வெவ்வேறு இசையமைப்பாளர்களால் உருவாக்கப்பட்டுள்ளது..

”டிஎன்ஏ” படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மாரி செல்வராஜ் கலந்துகொண்டார்..

அவ்விழாவில் மாரி பேசுகையில்…

“அதர்வாவுக்கு இது நியாபகம் இருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை. ”பரியேறும் பெருமாள்” பட ஸ்கிரிப்டை நான் முதலில் சொன்ன ஹீரோ அதர்வாதான்.

நான் அவரிடம் கதை சொன்னேன். ஆனால் அவரது பிஸியான ஷெட்யூல் காரணமாக, அவர் நடிக்கவில்லை. அதர்வா இந்தப் படத்தில் நடிக்கமாட்டார் என்று தெரிந்ததும் நான் மிகவும் வருத்தப்பட்டேன்.. நடிகர் முரளியின் மகனே நம்மை நிராகரித்து விட்டாரே என்ற வருத்தப்பட்டேன்” என்றார்..

இறுதியாக நாயகன் அதர்வா பேசும்போது.. இனி எந்த கதையா இருந்தாலும் சொல்லுங்கள் என மாரிக்கு பதில் கொடுத்திருந்தார்..

First I narrated Pariyerum Perumal script to Atharva says Mari Selvaraj