Thug Life Mutha Mazhai : தீ 100 சின்மயி – ஷ்ரேயாவை விழுங்கலாம்.. ; சின்மயி ஏன் இப்படி சொன்னார்.?

Thug Life Mutha Mazhai : தீ 100 சின்மயி – ஷ்ரேயாவை விழுங்கலாம்.. ; சின்மயி ஏன் இப்படி சொன்னார்.?

 

Thug Life Mutha Mazhai : தீ 100 சின்மயி – ஷ்ரேயாவை விழுங்கலாம்.. ; சின்மயி ஏன் இப்படி சொன்னார்.?

 

‘தக் லைஃப்’ படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. இதில் இடம்பெற்ற பாடல்களைப் பாடகர்கள் பாடினர்.

அதில், பாடகி சின்மயி பாடிய ‘முத்த மழை’ பாடலுக்கு அவர் பாடிய விதத்தைப் பலரும் பாராட்டினர்..

ஆனால், தமிழ் மொழியில் பாடகி தீ பாடியிருந்தார்.. தெலுங்கு & ஹிந்தியில் சின்மயி பாடியிருந்தார்..

ஆனால் பாடகி தீ பாடியது ரசிகர்களிடம் கவனம் பெறவில்லை.. இதனை அடுத்து தமிழிலும் சின்மயியை பாட வையுங்கள் எனப் படக்குழுவுக்கு பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்..

இந்த நிலையில் ஒரு நேர்காணலில் சின்மயி பங்கேற்று இது குறித்து பேசியுள்ளார்..

“தக் லைஃப் இசை விழாவில் முத்த மழை பாடலை தீ தான் ஆனால் அவர் ஊரில் இல்லாத காரணத்தினால் நான் பாட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது..

அதில் எனக்குக் கிடைத்த வரவேற்பை நம்பவே முடியவில்லை. தீ நல்ல குரல் வளம் கொண்டவர். தமிழில் முத்த மழை பாடலை அவர் பாட வைத்ததற்கு ஒரு வித்தியாசம் கொடுப்பதற்காக இருக்கலாம்..

என் 20-வது வயதில் முத்த மழையை நான் இந்தளவிற்குப் பாடியிருக்க முடியாது. தற்போது நிறைய பாடல்களில் அனுபவம் உண்டு..

தற்போது இளம் பாடகர்களில் நல்ல பாடகியான தீ இன்னும் 15 ஆண்டுகளில் 100 சின்மயி, ஷ்ரேயா கோஷல்களை விழுங்கலாம். எனவே பாடகி தீ-யையும் என்னையும் ஒப்பிடக்கூடாது.” என தெரிவித்துள்ளார் சின்மயி..

 

Dont Compare myself with Singer Dhee says Chinmayi