Breaking பிரதீப்பின் ‘டிராகன்’ விழாவில் Bad Girl & Bad Word பேசிய மிஷ்கின்

Breaking பிரதீப்பின் ‘டிராகன்’ விழாவில் Bad Girl & Bad Word பேசிய மிஷ்கின்

 

Breaking பிரதீப்பின் ‘டிராகன்’ விழாவில் Bad Girl & Bad Word பேசிய மிஷ்கின்

 

 

‘லவ் டுடே’ படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து பிரதிப் ரங்கராஜன் நடித்து வரும் திரைப்படம் ‘டிராகன்’.

‘ஓ மை கடவுளே’ படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இயக்கி வரும் இந்த படத்தில் நாயகியாக அனுப்பமா பரமேஸ்வரன் நடித்து வருகிறார்..

‘ஓ மை கடவுளே’ படத்துக்கு இசையமைத்த லியோன் ஜேம்ஸ் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.

இந்த படம் பிப்ரவரி 21ஆம் தேதி திரைக்கு வர உள்ள நிலையில் இன்று பிப்ரவரி 13ஆம் தேதி ஃப்ரீ ரிலீஸ் ஈவண்ட் சென்னையில் உள்ள ஐடிசி ஹோட்டலில் நடைபெற்றது.

இந்த விழாவில் இயக்குனர் மிஷ்கின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மேடை ஏறி பேசினார்.

அவர் பேசும்போது.. “நான் எந்த கெட்ட வார்த்தையும் பேச மாட்டேன்.. நான் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேடை ஏற வேண்டாம் என நினைத்திருந்தேன். ஆனால் என்ன செய்வது… F–K

பிரதீப்பை வாழ்த்த இங்கு வந்துள்ளேன்.. அவன் ஒரு சின்சியரான நல்ல பையன்.. அவன் அடுத்த படத்தில் வாய்ப்பு தருவான் என்று நான் சொல்லவில்லை.. நீ ஒரு வெங்காயமும் எனக்கு தர வேண்டாம் டா.. நீ 200 வருடங்கள் இதே போல வாழ வேண்டும்..

விஜய்சேதுபதி பற்றி இப்போது பேசக்கூடாது.. அதை ட்ரெயின் பட நிகழ்ச்சியில் பேசலாம்..

எத்தனை உயரங்களை நீ அடைந்தாலும் மாறக்கூடாது.. சிலர் ஒரு படம் இரண்டு படம் ஓடினாலே அவர்களுக்கு பின்னால் 200 பேரை அழைத்து வருவார்கள் ஏன் என்று நமக்குத் தெரியாது..

அஸ்வத் மாரிமுத்து ஒரு சிறந்த இயக்குனர்.. நாங்கள் நடிக்கும்போது ஒரு சின்ன டயலாக் கூட மிகவும் கவனம் செலுத்தி எடுப்பார்.. இங்கே வா இங்கே வா என்று நாங்கள் சொன்னாலும் அதிலும் மாற்றம் செய்வார்.. அதில் எனக்கு ஒரு மாற்றமும் தெரியாது.. ஆனால் அவர் நடந்தால் கூட ஒரு அடி இரண்டடி நடந்தால் போதும் என அளவு எடுத்து நடக்க சொல்லுவார்.. ஒரு இயக்குனராக எங்களுக்கு அது தெரிந்தாலும் அவர் சொல்வதைக் கேட்டு நாங்கள் நடிப்போம்.” என்று பேசினார் மிஸ்கின்..

இந்த நிகழ்ச்சியில் நான் BAD GIRL படத்தை பேசக்கூடாது.. ஆனால் அதை இங்கே நான் பதிவு செய்ய வேண்டும்.. அந்த படம் ட்ரைலர் வந்த பிறகு பல சர்ச்சைகளை உருவாக்கி விட்டது.. அது அரசியல்வாதிகள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்கள் எதுவாக இருந்தாலும் இரு தரப்பு உட்கார்ந்து பேசி திரை உலகமும் அரசியல்வாதிகளும் உட்கார்ந்து பேசி எந்த காட்சிகளை வெட்ட வேண்டும் என்பதை அறிந்து அதை வெட்டி அந்த படத்தை வெளியிட வேண்டும்.. பெண் இயக்குனர்கள் சினிமாவுக்கு வருவது அரிது.. அந்தப் படத்தை வர்ஷா பாரதி ஒரு பெண் இயக்கி இருக்கிறார்.. அவரின் வளர்ச்சி தடைப்படக்கூடாது. இதை இங்கே நான் பதிவு செய்ய விரும்புகிறேன்.”

அதன் பின்னர் திரையில் மிஷ்கின் படம் காட்டப்பட்டது.. அதனைப் பார்த்த பின் இவன் கண் தெரியாத மான்ஸ்டர்.. சில நல்லவர்களும் பல கெட்டவர்களும் வாழும் இந்த சினிமா உலகில் இவனும் வாழ்ந்து கொண்டிருக்கிறான். ஆனால் விரைவில் சினிமாவை விட்டு விலகி இவன் சென்று விடுவான் என மிஸ்கின் தன்னை பற்றி சொன்னார்..

Again Mysskin speaks Bad Word in Dragon event