சூப்பர் நண்பரே! ஓய்வு சிந்தனை உங்களுக்குண்டா? ரஜினிக்கு வைரமுத்து கோரிக்கை
சூப்பர் நண்பரே! ஓய்வு சிந்தனை
உங்களுக்குண்டா? ரஜினிக்கு வைரமுத்து கோரிக்கை
இந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் தனது 74வது பிறந்தநாளை இன்று டிசம்பர் 12ஆம் தேதி கொண்டாடி வருகிறார்..
இதனை முன்னிட்டு ரஜினியை அரசியல் பிரபலங்களும் திரையுலக பிரமுகர்களும் வாழ்த்தி வருகின்றனர்.
அவரது ரசிகர்கள் பிறந்த நாளை திருவிழா போல கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் ரஜினியின் நெருங்கிய நண்பரும் ரஜினிக்கு பல தத்துவப் பாடல்களை எழுதிய கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் பக்கத்தில் ரஜினியின் ஓய்வு குறித்து ஒரு கோரிக்கை வைத்துள்ளார்.
அத்துடன் பிறந்தநாள் வாழ்த்துக்களும் தெரிவித்துள்ளார்.
அதில்…
வயிற்றில்
தொப்பை சேராத உடலோடும்
தலையில்
கர்வம் சேராத மனதோடும்
அரைநூற்றாண்டாய்
ஒரு நட்சத்திரம்
உச்சத்தில் இருப்பது
அத்துணை எளிதல்ல
ஆனால் இன்னும்
தேயாத கால்களோடு
ஓயாத ஓட்டம்
சூப்பர் நண்பரே!
ஓய்வு குறித்த சிந்தனை
உங்களுக்குண்டா?
தெரியாது
ஆயினும் ஒரு யோசனை
ஓய்வுக்குமுன்
இன்னோர் உச்சம் தொடுங்கள்
அல்லது
இன்னோர் உச்சம் தொட்டபின்
ஓய்வு பெறுங்கள்
@rajinikanth | #SuperstarRajinikanth
Lyricist Vairamuthu request Rajini on his birthday

