திருமணம் ரத்து.; தனுஷ் & ஐஸ்வர்யா விவகாரத்து தீர்ப்பை வழங்கியது கோர்ட்

திருமணம் ரத்து.; தனுஷ் & ஐஸ்வர்யா விவகாரத்து தீர்ப்பை வழங்கியது கோர்ட்

 

 

திருமணம் ரத்து.; தனுஷ் & ஐஸ்வர்யா விவகாரத்து தீர்ப்பை வழங்கியது கோர்ட்

 

2004ல் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகர் தனுஷ்..

இவர்களுக்கு யாத்ரா & லிங்கா என்ற இரு மகன்கள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிவதாக, 2022ல் அறிவித்தனர்..

அதன்படி விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இம்மனுவை விசாரித்த கோர்ட் இருவரையும் நேரில் ஆஜராக, 3 முறை உத்தரவிட்டும், தனுஷ் & ஐஸ்வர்யா ஆஜராகவில்லை..

இதனை எடுத்து தனுஷ் & ஐஸ்வர்யா இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ உள்ளதாக கோலிவுட்டில் தகவல்கள் பரவியது.

இவ்வழக்கு கடந்த 21ம் தேதி நீதிபதி சுபாதேவி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தனுஷ், ஐஸ்வர்யா ஆகியோர் ஆஜராகினர். அவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினார் நீதிபதி சுபாதேவி.

அவர்களிடம் பரஸ்பர விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருக்கிறீர்களா அல்லது உங்கள் முடிவில் ஏதேனும் மாற்றம் உள்ளதா’ என கேட்டார் நீதிபதி சுபாதேவி..

‘எங்கள் முடிவில் மாற்றம் இல்லை. விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருக்கிறோம்’ என்று தெரிவித்தனர். இதை பதிவு செய்த நீதிபதி, இந்த வழக்கில் வரும் 27ல் உத்தரவு பிறப்பிக்கப்படும் என, அறிவித்தார்.

இதனையடுத்த, ஒருமித்த கருத்து அடிப்படையில் இருவருக்கும் விவாகரத்து வழங்கி இன்று நவம்பர் 27 நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.. 2004 இல் இவர்கள் செய்து கொண்ட திருமணம் ரத்து என அறிவித்தது..

Dhanush and Aishwarya Rajini got divorced