நடிகர் டெல்லி கணேஷ் என்பதை விட ‘வான்படை வீரன்’ மரணம் என்பதே சரி.! ஏன்.?

நடிகர் டெல்லி கணேஷ் என்பதை விட ‘வான்படை வீரன்’ மரணம் என்பதே சரி.! ஏன்.?

 

 

நடிகர் டெல்லி கணேஷ் என்பதை விட ‘வான்படை வீரன்’ மரணம் என்பதே சரி.! ஏன்.?

 

நடிகர் டெல்லி கணேஷ் இறந்துவிட்டார் என்பதை விட,* சுமார் 15 ஆண்டுகள் இந்த தேசதின் வான்படை பைலட்டாக நின்று காவல் இருந்த அந்த டெல்லி கணேஷ் எனும் முன்னாள் விமானபடை வீரன் காலமாகிவிட்டார் என்பதே சரியானது..

1962ல் இருந்து 1974 வரை அவர் இந்திய விமானபடையில் இருந்தார், அதன் பின்பே விருப்ப ஓய்வு பெற்று கலை உலகம் பக்கம் வந்தார்..

தமிழக நடிகர்களிலே ராணுவ தொடர்பு உடையவரும் விமானம் இயக்க தெரிந்தவரும் அவர் ஒருவர்தான்..

ஆனால் மிக எளிமையான மனிதர், எப்போதும் எங்கும் வெகு எளிமையாக தெரிந்தவர், அகம்பாவமோ அலட்டலோ எங்கும் இராது.

நெல்லை மாவட்டம் வல்லநாடு எனும் ஊரில் 1944ல் பிறந்தார்.. கல்லூரி படிப்பு முடிந்து ராணுவம் சென்றார்

சோ ராமசாமி, காத்தாடி ராமமூர்த்தி என பலரால் நாடகங்களுக்கு சென்றவர் பாலசந்தரால் சினிமாவுக்கு அழைத்துப்வரபட்டு , “டெல்லி கணேஷ்” என்றானார்.

ஏற்கனவே தமிழ் சினிமாவில் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் என்ற பல நடிகர்கள் இருந்த நிலையில் டெல்லிக்கும் கணேசுக்கும் தொடர்பு இருந்ததால் இவருக்கு டெல்லி கணேஷ் என்று பெயரிட்டார் கே பாலச்சந்தர்.

முதலில் வைக்க நெல்லை கணேஷ் என்று பெயர் வைக்கலாமா? என்று இவர் கேட்க கே. பாலச்சந்திரன் வேண்டாம் அது அரசியல்வாதி போல இருப்பதாக கூறி பெயரை மாற்றி இருக்கிறார்..

1985ல் இருந்து அவரின் சினிமா பயணம் தொடங்கிற்று, நாயகன், முதலான படங்களில் அவர் தன் அபார நடிப்பினை வெளிபடுத்தினார், புதுகவிதை போன்றவை எப்போதும் நினைவில் நிற்பது.

அவரின் சினிமா தாண்டி சிலாகிக்க வேண்டிய விஷயம் இரண்டு உண்டு.

முதலாவது அவரின் கோவில் பணி.., வல்லநாடு பக்கம் பல ஆலயங்களுக்கு அள்ளி கொடுத்தார்.. பெரிய அடியாராக அள்ளி கொடுத்தார்.. ஆனால் பெயர் வராமல் பார்த்து கொண்டார்

ஆம், அவரால் பயனடைந்த கோவில்கள் ஏராளம் உண்டு.. மனிதர் வாய்விட்டு ஒரு இடமும் சொன்னதில்லை

இரண்டாவது எங்கு சென்றாலும் அந்த நெல்லை மண்ணின் அடையாளத்தோடு இருந்தார்.. கோவில்பட்டியினை தாண்டிவிட்டாலே தாங்கள் பிரிட்டிஷ் அரசகுடும்பமென நினைந்து தன் தோற்றம், பேச்சு, அடையாளமெல்லாம் மாற்றுவோர் மத்தியில் அவர் கடைசிவரை நெல்லையின் இயல்பான தமிழில் பேசினார்..

அந்த மண்ணையும் மக்களையும் மரபையும் நேசிக்காமல் அது சாத்தியமில்லை..

இப்படியானவர்கள் வெகுசிலர்தான்.. எத்தனையோ வருட டெல்லி வாசம் அதுவும் இந்தி ஆங்கிலம் கலந்த டெல்லி வாசம்.. எந்த தமிழ் என புரியாத சென்னை வாசம் என அவர் சொந்த ஊரை விட பல்லாண்டுகள் அதிகம் வெளியிடத்தில் இருந்தும் கடைசிவரை தன் மண்ணின் அடையாளத்தை விடவில்லை..

அவரிடம் மிக மிக போற்றபட வேண்டிய குணம் அதுதான்..

அவர் படங்களை பார்க்கும் போதெல்லாம் நெல்லை பக்கம் காணும் வெகுளியான ஆனால் பாசமான முகங்கள் நினைவுக்கு வரும்.. இனி அப்படியான பல முகங்களில் டெல்லி கணேசும் நினைவுக்கு வருவார்..

பாலையா போலவே மிக இயல்பான நடிப்பினை, அலட்டிகொள்ளாத ஆனால் ஆழமான அதே நேரம் வெள்ளந்தியான நடிப்பினை நெல்லை மண்ணின் அடையாளமாக தந்தவர் டெல்லி கணேஷ்..

Ex Military man Actor Delhi Ganesh news

 

—–

 

 

 

Related articles