கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக ‘பாட்டில் ராதா’-வை திறக்கும் பா. ரஞ்சித்

கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக ‘பாட்டில் ராதா’-வை திறக்கும் பா. ரஞ்சித்

 

கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக ‘பாட்டில் ராதா’-வை திறக்கும் பா. ரஞ்சித்

 

 

இயக்குனர் பா ரஞ்சித் தயாரிப்பில் அடுத்ததாக திரைக்கு வர உள்ள படம் ‘பாட்டல் ராதா’.

ரஞ்சித்திடம் உதவி இயக்குநராக இருந்த தினகரன் சிவலிங்கம் இயக்கியுள்ளார். இதில் குரு சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், ஜான் விஜய், மாறன், ஆண்டனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஷான் ரோல்டன் படத்துக்கு இசையமைக்க ரூபேஷ் ஷாஜி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இந்நிலையில் இப்படம் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு வரும் டிசம்பர் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படம் குறித்து இயக்குநர் தினகரன் கூறுகையில்…

“இந்தப் படம் நகைச்சுவையையும், நம்பிக்கையையும் அடிப்படையாக கொண்டது. படத்தில் குரு சோமசுந்தரம் கொத்தனாராகவும், குடிப் பழக்கத்துக்கு அடிமையானவராகவும் நடித்துள்ளார். மொத்தக் கதையும் மீண்டு வருவதை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார் இயக்குனர் தினகரன்..

Bottle Radha movie release updates