‘அமரன்’ காண கமல் அழைப்பு..; சிவகார்த்திகேயன் நடிப்பில் சிலிர்த்த ஸ்டாலின்

‘அமரன்’ காண கமல் அழைப்பு..; சிவகார்த்திகேயன் நடிப்பில் சிலிர்த்த ஸ்டாலின்

 

 

 

‘அமரன்’ காண கமல் அழைப்பு..; சிவகார்த்திகேயன் நடிப்பில் சிலிர்த்த ஸ்டாலின்

 

 

கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவான திரைப்படம் அமரன் தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது.

இந்த படம் வெளியாவதற்கு முன்பே இந்தப் படத்தைக் காண தயாரிப்பாளரும் நடிகருமான கமல்ஹாசன் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களை அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த நிலையில் படத்தை பார்த்த ஸ்டாலின் கூறியதாவது…

நண்பர் கலைஞானி கமல் @ikamalhaasan அவர்களது அன்பு அழைப்பை ஏற்று, நேற்று #அமரன் திரைப்படம் பார்த்தேன்.

புத்தகங்களைப் போல் – திரைப்பட வடிவிலும் உண்மைக் கதைகளை இன்றைய இளைஞர்களிடம் கொண்டு சேர்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது!

தமிழ்நாட்டைச் சேர்ந்த இராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களது வீரத்தையும் அர்ப்பணிப்பையும் உணர்வுப்பூர்வமாகப் படமாக்கியுள்ள இயக்குநர் @Rajkumar_KP, மேஜர் முகுந்த் வரதராஜன் – திருமிகு. இந்து ரெபேக்கா வர்கீஸ் ஆகியோரது பாத்திரங்களைத் தங்களது நடிப்பால் சிறப்பாக வெளிப்படுத்திய தம்பி சிவகார்த்திகேயன் & சாய்பல்லவி @Siva_Kartikeyan, @Sai_Pallavi92 மற்றும் #Amaran படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்!

நாட்டைப் பாதுகாக்கும் நமது இராணுவ வீரர்களுக்கும் – நம் நினைவில் வாழும் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களுக்கும் Big Salute.

 

TN CM stalin watched Amaran and appreciated team

 

—*—–*