தலைமுடி வியாபாரத்தை சொல்ல ‘பிளாக் கோல்ட்’ கொண்டுவரும் நடிகர் வெற்றி

தலைமுடி வியாபாரத்தை சொல்ல ‘பிளாக் கோல்ட்’ கொண்டுவரும் நடிகர் வெற்றி

 

 

தலைமுடி வியாபாரத்தை சொல்ல ‘பிளாக் கோல்ட்’ கொண்டுவரும் நடிகர் வெற்றி

 

வெற்​றி நாயக​னாக நடித்​துள்ள படம் ‘பிளாக் கோல்​டு’. இதை தீரன் அருண்​கு​மார் இயக்​கி​யுள்​ளார். இந்த படம் ஆக்சன் திரில்​லர் படமாக உருவாகியுள்ளது..

இதில் பிரி​யால​யா, லிவிங்​ஸ்​டன், துளசி, பிக்​பாஸ் அபி​ராமி, ஏ.வெங்​கடேஷ், விஜய் டிவி ராமர், சபிதா ராய், ஜீவா ரவி,அஜித் விக்னேஷ் உள்​ளிட்ட பலர் நடித்​துள்​ளனர்.

www.rightnewsraja.com

எம்​எம் ஸ்டூடியோஸ் சார்​பில் எம்​.மூர்த்தி வழங்​கும் இப்​படத்​துக்கு சந்​தோஷ்கு​மார் வீரா​சாமி ஒளிப்​ப​திவு செய்​துள்​ளார். கவாஸ்​கர் அவி​னாஷ் இசை அமைத்​துள்​ளார்.

ஒரு படித்த நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இளைஞன் தன் குடும்பத்தில் ஏற்பட்ட ஒரு இழப்பிற்க்கு பதில் தேடி எந்த அளவிற்கு துணிகிறான் என்பதே இப்பட கரு..

இதன் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்தபடம் வரும் நவம்பர் 13ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. சென்சாரில் ‘பிளாக் கோல்​டு’படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இந்த படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

அப்போது நடிகர் வெற்றி பேசும்போது…

பிளாக் கோல்ட் என்பது தலைமுடி வியாபாரத்தை பற்றிய கதை.. இதன் பின்னால் இருக்கும் நெட்வொர்க் பற்றி கதை அமைக்கப்பட்டுள்ளது.. மேலும் இத்துடன் அப்பா மகனின் பாசத்தை பற்றியும் ஒரு உணர்வுபூர்வமான கதையை சொல்லியிருக்கிறார் இயக்குனர் தீரன்..

இந்தப் படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்… பத்திரிகை மீடியா நண்பர்கள் இந்த படத்திற்கு ஆதரவு கொடுக்க வேண்டும்” என்றார்..

 

Black Gold movie is about Human Hair Business says Vettri

—