மனம் மகிழ.. மண் மணக்க இசை தந்த இளையராஜாவுக்கு சந்தன மாலை அணிவித்த ‘டோரதி’ டைரக்டர்
மனம் மகிழ.. மண் மணக்க இசை தந்த இளையராஜாவுக்கு சந்தன மாலை அணிவித்த ‘டோரதி’ டைரக்டர்
இளையராஜா இசையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘டோரதி’..
இதில் ரிஷிகாந்த், சனந்த், கீர்த்தி சுரேஷ், முத்துக்குமார், சௌந்தரராஜா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.. 1980 கால கட்டங்களில் இந்த உருவான படத்திற்கு திரு ஒளிப்பதிவு செய்திருந்தார்.
திருநங்கைகளின் காதல் உணர்வுகளை பேசும் படமாக அமைந்திருந்தது.. ஒரு பக்கம் இந்த படம் சர்ச்சையானாலும் படத்திற்கு பெரும்பாலானோர் பாராட்டு தெரிவித்து இருந்தனர்..
பிரபல இயக்குனர்கள் மணிரத்னம், ஷங்கர், சேரன், மிஷ்கின் உள்ளிட்ட பலரும் பாராட்டுக்கள் தெரிவித்து புகழ்ந்து வருகின்றனர்..
சமீபத்தில் டோரதி வெற்றி விழாவை சென்னை கமலா திரையரங்கில் கொண்டாடி மகிழ்ந்தனர்..
மேலும் இதனையடுத்து இந்த படத்திற்கு மண் மணக்க இசையை கொடுத்த இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்து படக்குழுவினர் இளையராஜா அலுவலகத்தில் அவரை சந்தித்தனர்..
இளையராஜா அலுவலகத்திற்கு சென்ற கார்த்திக் சுப்புராஜ், சனந்த், ரிஷிகாந்த் உள்ளிட்ட படக்குழுவினர் அவரிடம் ஆசி பெற்றனர்.
அப்போது இளையராஜா காலில் விழுந்து ஆசி பெற்ற கார்த்திக் சுப்புராஜ் அவருக்கு சந்தன மாலை அணிவித்து மகிழ்ந்தார்..
இதையடுத்து படக்குழுவினர் வாங்கி வந்த கேக்கை இளையராஜா வெட்டி மகிழ்ந்தார்.
Dorothy success Team met ilaiyaraaja and got blessing

