ஒரு கதையை படமாக ஏத்துக்க முடியலையா.. அவங்களுக்குதான் பிரச்சனை… – ‘டோரதி’ குறித்து கார்த்திக் சுப்புராஜ்

ஒரு கதையை படமாக ஏத்துக்க முடியலையா.. அவங்களுக்குதான் பிரச்சனை… – ‘டோரதி’ குறித்து கார்த்திக் சுப்புராஜ்

 

ஒரு கதையை படமாக ஏத்துக்க முடியலையா.. அவங்களுக்குதான் பிரச்சனை… – ‘டோரதி’ குறித்து கார்த்திக் சுப்புராஜ்

 

 

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த், முத்துக்குமார், ஜீவா சுப்ரமணியம், ராம்ஸ் ஆகியோர் நடிப்பில் கடந்த 25ஆம் தேதி வெளியான படம் ‘டோரதி’.

இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி தனது ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் மூலம் தயாரிக்கவும் செய்துள்ளார்..

இது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான பத்தாவது திரைப்படமாகும்..

எனவே இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் முதன்முறையாக இளையராஜாவுடன் பணிபுரிகிறார் என்ற செய்தி பரவியுடன் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

இந்தப் படத்தை பார்த்த நாம் பாசிட்டிவான விமர்சனம் செய்திருந்தோம். ஆனால் சில நபர்கள் வேண்டும் என்று இந்த படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் செய்து அவர்களுக்கு வீடியோ வியூஸ் ஏற்றி கொண்டிருக்கின்றனர்..

என்னதான் பாசிட்டிவான கருத்துக்கள் பதிவிட்டாலும் நெகட்டிவ் கருத்துக்களுக்கு மட்டுமே சில மக்களும் முன்னுரிமை கொடுத்து பார்த்து வருகின்றனர்

இந்த சூழ்நிலையில் இந்த நெகட்டிவ் விமர்சனங்கள் குறித்து கார்த்திக் சுப்புராஜ் மதுரையில் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது…

‘டோரதி’ படத்தை பார்க்காமலே சில விமர்சனம் செய்து வருகின்றனர்.. பெரும்பாலும் பத்திரிகைகள் பாராட்டும் நிலையில் சிலர் வேண்டுமென்றே நெகட்டிவ் ஆக பேசி வருகின்றனர்..

திருநங்கை பற்றிய ஒரு கதை, உருவாகுவதே ஒருவருக்கு பிரச்சனையாக இருக்கிறதென்றால் அது யாருடைய பிரச்சனை..

ஒரு கதையை படமாகக்கூட உங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றால் உங்கள் மனதுக்குள் தான் ஏதோ பிரச்சனை இருக்கிறது..

இது குறித்து விவாதிக்க வேண்டும். அப்போது தான் ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். மற்றபடி அவர்கள் பதிலடி கொடுக்கிறார்கள் என்பதற்காக நானும் பதிலடி கொடுத்தால் அது தொடரும்” என்றார் கார்த்திக் சுப்புராஜ்..

 

 

Karthik Subburaj slipper shot reply to Dorothy haters