மண்டாடி வெற்றி.. ரஜினி வாழ்த்தை அவர் ஸ்டைலில் பேசிய சூரி..; தெலுங்கர்களிடம் மன்னிப்பு கேட்ட டைரக்டர்
மண்டாடி வெற்றி.. ரஜினி வாழ்த்தை அவர் ஸ்டைலில் பேசிய சூரி..; தெலுங்கர்களிடம் மன்னிப்பு கேட்ட டைரக்டர்
சூரி நடிப்பில் மதிமாறன் புகழேந்தி இயக்கிய படம் ‘மண்டாடி’.
ராமநாதபுரம் கடலோடிகளின் பாரம்பரிய விளையாட்டான பாய்மரப்படகுப் போட்டியை மையமாக வைத்து உருவாகியுள்ளது..
இதில் நாயகனாக சூரியும் வில்லனாக சுஹாஸும் நடித்துள்ளார்கள்.. நாயகியாக மகிமா நடிக்க ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார்.
இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்று ரூ.80 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. இந்தப் படத்தை பார்த்து நடிகர் ரஜினிகாந்த் நடிகர் சூர்யா அழைத்து தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்..
என் நடிப்பை தலைவர் ரஜினிகாந்த் வாழ்த்தி விட்டார் என்று மண்டாடி வெற்றி விழா மேடையில் ரஜினி பேசியது போல் அவரது குரலில் பேசி அசத்தியிருந்தார்..
www.rightnewsraja.com
அடுத்து.. இந்த விழா மேடையில் இயக்குனர் மதிமாறன் பேசிய பேச்சு தற்போது சர்ச்சைக்குள்ளாகி உள்ளது..
மேலும்.. தெலுங்கு நடிகர் சுஹாஸ். அவரது நிறத்தை வைத்து தெலுங்கில் கேலி செய்யப்பட்டதால் அவர் தமிழில் நடிக்க யோசிப்பதாகவும் இயக்குநர் பேசியிருந்தார்..
இந்தப் பேச்சு சர்ச்சையான நிலையில் தற்போது விளக்கம் அளித்துள்ளார்..
தமிழில் கருப்பு நிறம் ஒரு பிரச்சினையே இல்லை என்றும் இங்கு உங்களுக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள்” என இயக்குநர் பேசினார். இது மறைமுகமாக தெலுங்கு மக்களை அவர்கள் இனவெறி ரீதியாக செயல்படுவதாகப் புரிந்துகொள்ளப்பட்டது.
நேற்று (செப்.17) மண்டாடி வெற்றி விழாவில் நான் பேசியது குறித்து விளக்கம் அளிக்க விரும்புகிறேன்.
நடிகர் சுஹாஸை நிறத்தை வைத்து கேலி செய்த இயக்குநர் ஒருவரைப் பற்றி மட்டுமே நான் பேசினேன். எனது வார்த்தைகள் தெலுங்கு மக்களையோ அல்லது அந்த ரசிகர்களையோ அல்லது தெலுங்கு சினிமாவை குறித்தோ கூறப்பட்டவை அல்ல..
சொல்லப்போனால், ஹைதராபாத் நிகழ்ச்சியில் இந்தியாவிலேயே தெலுங்கு சினிமாதான் முன்னணியில் இருக்கிறது எனக் கூறியுள்ளேன். தெலுங்கு சினிமா மற்றும் அந்த ரசிகர்கள் மீதும் மிகுந்த மரியாதை இருக்கிறது.
மண்டாடி படத்திற்கும் எனக்கும் அவ்வளவு அன்பைக் கொடுத்த தெலுங்கு மக்கள் மீது வேண்டும் என்றே குறைசொல்ல எனக்கு எந்தவொரு முகாந்திரமும் இல்லை.
எனது வார்த்தைகள் தவறாகப் புரிந்துக்கொள்ளப்பட்டால் அதற்காக வருந்துகிறேன். தெலுங்கு மக்கள், தெலுங்கு சினிமா மீதான எனது நேசம் எப்போதும் மாறாதது…
ஒருவர் அவரைப் பற்றி தவறாகப் பேசியதால், சுஹாஸுக்கு ஆதரவளிக்கவே அப்படி பேசினேன் தவிர அனைத்து தெலுங்கு மக்களையும் அப்படி பேசவில்லை என தெரிவித்துள்ளார்..
Mandaadi success Rajini wishes Soori and team
—

