சசிகுமார் நடிப்பில் மதுரை சஸ்பென்ஸ் திரில்லர் சீரிஸ் ‘வதந்தி’ சீசன் 2′ அப்டேட்
சசிகுமார் நடிப்பில் மதுரை சஸ்பென்ஸ் திரில்லர் சீரிஸ் ‘வதந்தி’ சீசன் 2′ அப்டேட்
ஆகஸ்ட் 7 முதல் உலகம் முழுவதும் ஸ்ட்ரீமிங் ஆகும் பிரைம் வீடியோவின் ‘வதந்தி’ சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி சீரிஸ்
ஆணட்ரூ லூயிஸ் உருவாக்கி, எழுதி, இயக்கியுள்ள இந்த சீரிஸை வால்வாட்சர் ஃபிலிம்ஸ் சார்பில் புஷ்கர் – காயத்ரி கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களாக தயாரித்துள்ளனர்..
குற்றவுணர்வு, ரகசியங்கள், வதந்திகள் மற்றும் மீண்டுவரும் உணர்வு ஆகியவற்றை மையமாகக் கொண்ட பரபரப்பான மர்மக் கதையாக வதந்தி சீசன் 2 உருவாகியுள்ளது..
மதுரையை கதைக்களமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த சஸ்பென்ஸ் திரில்லர் சீரிஸில் சசிகுமார் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் யஷ்வந்த், அனகா மருதோரா, அபர்ணா தாஸ், விவேக் பிரசன்னா, ரேவதி சர்மா, அர்ஜுன் நந்தகுமார் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
CHENNAI,India—July 27, 2026 — ஆகஸ்ட் 7 முதல், வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி பிரைம் வீடியோவில் தமிழுடன், தெலுங்கு மற்றும் இந்தி டப்பிங் பதிப்புகளிலும், ஆங்கிலம் உள்ளிட்ட 15 மொழிகளில் சப்டைட்டில்களுடன், இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் 240-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பிரத்யேகமாக ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது..
ஆண்ட்ரூ லூயிஸ் உருவாக்கி, எழுதி, இயக்கியுள்ள இந்த 8 எபிசோடுகள் கொண்ட சீரிஸை, வால்வாட்சர் ஃபிலிம்ஸ் சார்பில் புஷ்கர் – காயத்ரி கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களாக தயாரித்துள்ளனர். இதில் எம். சசிகுமார், எஸ்.ஐ. மூசா ரஸா என்ற நேர்மையான, உண்மையைத் தேடி விடாமுயற்சியுடன் செயல்படும் காவல் அதிகாரியாக நடித்துள்ளார். அவருடன் யஷ்வந்த், அனகா மருதோரா, அபர்ணா தாஸ், விவேக் பிரசன்னா, ரேவதி சர்மா மற்றும் அர்ஜுன் நந்தகுமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மதுரையின் கலாச்சாரப் பின்னணியையும், உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு திருவிழாவின் துடிப்பையும் கதையுடன் இயல்பாக இணைக்கும் இந்த சீசன், வதந்தி தொடரின் அடையாளமான ‘வதந்தி Vs உண்மை’ என்ற மையக்கருவை மேலும் ஆழமாக ஆராய்கிறது. பல அடுக்குகள் கொண்ட திரைக்கதை, சிக்கலான கதாபாத்திரங்கள், உணர்வுபூர்வமான உறவுகள் ஆகியவற்றின் மூலம் பார்வையாளர்களை இறுதி வரை பரபரப்பில் வைத்திருக்கும் வகையில் கதை நகர்கிறது..
நெடுஞ்சாலை திட்டத்தின் தொடக்க விழாவின்போது எலும்புக்கூடு எச்சங்கள் கண்டெடுக்கப்படுகின்றன. அந்த விசாரணையை மேற்கொள்ளும் எஸ்.ஐ. மூசா ரஸா, ‘மணி’ என்ற மர்மமான கைதியை நோக்கி செல்லும் எதிர்பாராத தடயங்களை கண்டுபிடிக்கிறார். அரசியல் அழுத்தம், ஊடக பரபரப்பு மற்றும் மனித மனங்களின் பலவீனங்கள் ஆகியவற்றுக்கு மத்தியில் உண்மையை வெளிக்கொணர அவர் மேற்கொள்ளும் போராட்டமே இந்த சீசனின் மையக்கதை.
Sasikumar in Vadhandhi season 2 streaming date

