TRAIN நல்லா இல்லன்னா செருப்பால அடிங்க.. விஜய்சேதுபதியை மிஞ்ச கமலால் கூட முடியாது.. – மிஷ்கின்
TRAIN நல்லா இல்லன்னா செருப்பால அடிங்க.. விஜய்சேதுபதியை மிஞ்ச கமலால் கூட முடியாது.. – மிஷ்கின்..;
மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ள படம் டிரெயின்..
உதயநிதி நடித்த ‘சைக்கோ’ படத்திற்கு பிறகு மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி திரைக்கு விரைவில் வர உள்ள படம் ட்ரெயின் என்பது குறிப்பிடத்தக்கது..
மிஷ்கின் இயக்கத்தில் உருவான ‘பிசாசு 2’ இன்னும் வெளியாகவில்லை..
த்ரில்லர் பாணியில் ரயிலில் நடப்பது போல் எடுக்கப்பட்டுள்ளது.. இதில், நடிகர்கள் நாசர், ஷ்ருதி ஹாசன், யூகி சேது, நரேன், கே.எஸ். ரவிக்குமார், கலையரசன் போன்றோர் நடித்துள்ளனர்..
கலைப்புலி எஸ் தானு தயாரித்துள்ள இந்த படத்திற்கு மிஷ்கின் இசையமைத்துள்ளார் என்பது கூடுதல் தகவல்..
இந்த படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று ஜூலை 12ஆம் தேதி இந்தப் படத்தில் இசை வெளியீட்டு விழா சென்னை சத்தியம் தியேட்டரில் மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது..
இதில் திரை உலக சேர்ந்த முக்கிய பிரபாகர்கள் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்..
இந்த இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியை விஜய் டிவியை சேர்ந்த டிடி மற்றும் மாகாபா ஆனந்த் இருவரும் தொகுத்து வழங்கினர்..

ஸ்ருதிஹாசன் மற்றும் மிஷ்கின் ஆகியோர் படத்தில் இடம்பெற்ற பாடல்களை மேடையில் பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.. அதிலும் முக்கியமாக திருநங்கை தாலாட்டு என்ற பாடலை மிஷ்கின் பாடிய போதும் பாடி முடித்த பிறகும் ரசிகர்கள் மௌனமாக எமோஷனல் ஆனது குறிப்பிடத்தக்கது..
www.rightnewsraja.com
ஒவ்வொரு சிறப்பு விருந்தினரும் மேடையில் ஏறும்போது மிஷ்கின் பேசிக் கொண்டிருந்தார் அவர் பேசும்போது,..
தான் தயாரிக்கும் திரைப்படங்களை பிரம்மாண்டமாக பிரமோஷன் செய்பவர் கலைப்புலி தாணு.. இன்டர்நெட்டில் சென்று கூகுளில் Chat GPT யில் தேடினால்.. உலகத்தின் மிகச்சிறந்த பிரமோஷன் படம் எது.? என்று கேட்டால் பல ஹாலிவுட் படங்கள் பெயர்கள் வரும்.. ஆனால் ஒரே ஒரு தமிழ் படம் பெயர் இடம் பெறும்.. அது கபாலி தான்… அந்த படத்திற்காக விமானத்தில் ப்ரமோஷன் செய்திருந்தார் தாணு.. இந்த படத்திற்காக நிச்சயம் ட்ரெயினில் பிரம்மாண்டமாக ப்ரமோஷன் செய்வார் என நம்புகிறேன்..
இந்தப் படத்திற்காக விஜய் சேதுபதி கொடுத்த அர்ப்பணிப்பு சிறப்பு… அவரைத் தவிர அந்த கேரக்டர் யாராலும் நடிக்க முடியாது.. ஏன் கமல்ஹாசன் ஆக முடியாதா அமீர்கானால் முடியாதா என்று கேட்கலாம்.. நிச்சயமா முடியாது.. இது விஜய் சேதுபதி மட்டும்தான் முடியும்.. ஏனென்றால் இது அவருக்காக எழுதப்பட்ட கதை..
ட்ரெயின் படம் ரொம்ப சூப்பரா வந்திருக்கு இந்த படம் நல்லா இல்லனா என்னை செருப்பால அடிங்கன்னு சொல்லுவேன்..

ஸ்ருதிஹாசனை பற்றி குறிப்பிட்டு பேசும்போது.. இவரது தந்தை கமலுடன் என்னால் இதுவரை பணி செய்ய முடியவில்லை.. தந்தை எட்டடி பாய்ந்தால் குட்டி 80 ஆயிரம் பாயும் அதுபோல ஸ்ருதிஹாசன் பன்முக திறமை கொண்டவர்.. இந்தப் படத்தில் அவர் கிட்டத்தட்ட ஒரு கெஸ்ட் ரோல் தான் செய்திருக்கிறார்… என் குழந்தையை போன்றவர்.. நிச்சயமாக அவருக்காக அவருடன் இணைந்து ஒரு படம் செய்ய வேண்டும் அதை தாணு தயாரிக்க வேண்டும்..
www.rightnewsraja.com
படக்குழுவினரை வாழ்த்தி அமீர் பேசும்போது..
மிஷ்கின் எதையும் மனதில் பட்டதை பேசுபவர்.. அவர் இரவில் கண்ணாடி அணிந்திருப்பார் யாராவது கேட்டால் நான் அப்படிதான் என்பார்.. ஏன் ஹீரோ எப்போதும் தலை குனிந்தபடி இருக்கிறார் என்று கேட்டால் என் ஹீரோ அப்படித்தான் இருப்பார் என்பார்.. எதையும் தைரியமாக பேசுபவர் மிஷ்கின்..
விஜயகாந்த் நடித்த கூலிக்காரன் படத்தை பிரம்மாண்டமாக பிரமோஷன் செய்தவர் தாணு…அவர் வடிவமைத்த அந்த சிலை வண்டியை மாடல் பார்ப்பதற்காகவே நான் மவுண்ட் ரோடு சென்று பார்ப்பேன்..
சுந்தர பாண்டியன் பார்த்த பிறகு கமலா தியேட்டரில் விஜய் சேதுபதி சந்தித்தேன்.. அவர் படம் எப்படி இருந்தது என்று கேட்ட நன்றாக நடித்தீர்கள் படம் நன்றாக இருந்தது என்றேன்.. அன்று விஜய் சேதுபதி எப்படி என்னிடம் பேசினாரோ இன்றும் அப்படியேதான் அவர் இருக்கிறார்.. பெரிய உயரங்களை அடைந்தாலும் அவர் அப்படியே எளிமையாக இருக்கிறார்.
தற்போது விஜய் சேதுபதி தானு மிஷ்கின் மூவரும் இணைந்து இருக்கிறார்கள்.. இந்த படத்தில் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.. படக்குழுவினருக்கு என் வாழ்த்துக்கள்..” என்றார் அமீர்..
www.rightnewsraja.com
Even Kamal can’t do Vijay Sethupathi character says Mysskin

