திருப்பூர் சுப்ரமணியத்துக்கு பிடிச்சிருக்கா முக்கியமில்ல.. மக்களுக்கு பிடிச்சிருக்கு..; பதிலடி கொடுத்த Karuppu RJB
திருப்பூர் சுப்ரமணியத்துக்கு பிடிச்சிருக்கா முக்கியமில்ல.. மக்களுக்கு பிடிச்சிருக்கு..; பதிலடி கொடுத்த Karuppu RJB
சூர்யா நடிப்பில் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் உருவான கருப்பு திரைப்படம் கடந்த மே மாதம் 15ஆம் தேதி வெளியானது.. பல மாதங்களாக இந்த படம் தள்ளி வைக்கப்பட்டு கடந்த மாதம் வெளியானது.. அப்போது இது பற்றி பல எமோஷனலாக பேசியிருந்தார் இயக்குனர் ஆர் ஜே பி.
ஆர் ஜே பாலாஜி மற்றும் கருப்பு பட தயாரிப்பாளர் குறித்து சில சர்ச்சையான கருத்தைகளை தெரிவித்திருந்தார் விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம்.
இந்த நிலையில் திருப்பூர் சுப்பிரமணியன் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார் இயக்குனர் நடிகருமான ஆர் ஜே பாலாஜி..
கருப்பு படத்தை நான் முன்று ஆண்டுகளுக்கும் மேலாக எழுதியிருக்கிறேன். என் குடும்பத்தினருடன், தயாரிப்பாளர் குடும்பத்தினருடன் கோயிலுக்கும் சென்றோம்.
என்னுடைய பங்களிப்பு இல்லாமல் இருந்திருந்தால் தயாரிப்பாளர் என்னுடன் மகிழ்ச்சியாக வந்திருக்க மாட்டார்.
தயாரிப்பாளரே திருப்பூர் சுப்ரமணியத்துக்கு ஃபோன் செய்து, ‘ஏன் சார் இப்படியெல்லாம் பேசுகிறீர்கள்’ என கேட்டிருக்கிறார்.
ஒரு இயக்குநராகவும், நடிகராகவும் இந்தப் படத்தை மிகுந்த நேர்மையுடன் விளம்பரப்படுத்தினேன்.
தயாரிப்பாளர் மகிழ்ச்சியாக இருக்கிறார். சூர்யாவும் மைழ்ச்சி. முழு படக்குழுவும் மகிழ்ச்சி.
திருப்பூர் சுப்ரமணியத்துக்கு பிடித்திருக்கிறதா, ஈரோடு மகேஷ், மதுரை முத்துவுக்கு பிடித்திருக்கிறதா என்பது முக்கியம் இல்லை.
மக்களுக்கு பிடித்திருக்கிறது. அதைத்தான் பார்க்க வேண்டும். அதுதான் முக்கியம்.
அவர் (திருப்பூர் சுப்ரமணியம்) ஒரு பெரிய மனிதர். அவர் தன்னுடைய கருத்தை சொல்லியிருக்கிறார்.
எனது தயாரிப்பாளர்களுக்கு மகிழ்ச்சி கிடைத்திருக்கிறது. நல்ல வருமானமும் கிடைத்திருக்கிறது.
நான் கடுமையாக உழைத்தேன். என்னால் செய்ய முடிந்தது அது ஒன்றுதான். அதுதான் சரியான விஷயமும்கூட.
அதிலிருந்து எங்களுக்கு கிடைக்க வேண்டிய பலன் கிடைத்துவிட்டது. எனவே எங்களுக்கு மகிழ்ச்சிதான்..
– RJ பாலாஜி
RJ Balaji reply to Tirupur Subramanian about Karuppu movie
—

