Gatta Kusthi 2..; ஹவுஸ் ஹஸ்பண்ட் நான்..; இப்பவே லாபம் வந்துட்டு.. என் ஒய்ப் கேரக்டர்தான் ஹீரோயின்… – விஷ்ணு விஷால்
Gatta Kusthi 2..; ஹவுஸ் ஹஸ்பண்ட் நான்..; இப்பவே லாபம் வந்துட்டு.. என் ஒய்ப் கேரக்டர்தான் ஹீரோயின்… – விஷ்ணு விஷால்
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான கட்டா குஸ்தி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.. இதனைத் தொடர்ந்து தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது..
இந்தப் படத்தின் நாயகன் விஷ்ணு விஷால் இந்த படத்தை தயாரித்து நடித்திருக்கிறார்.. மேலும் ஐசரி கணேசன் இந்த படத்தின் தயாரிப்பாளராக இணைந்துள்ளார்..
செல்லா அய்யாவு இயக்கிய இந்த படத்தில் விஷ்ணு விஷால் உடன் ஐஸ்வர்ய லட்சுமி கருணாஸ், முனீஸ் காந்த் உள்ளிட்ட பலரும் இணைந்துள்ளனர்.. முதல் பாகத்தை விட இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்டோர் இணைந்துள்ளனர்..
நட்சத்திரங்களில் பெரிய மாற்றம் இல்லை ஆனால் தொழில்நுட்பக் குழுவில் உள்ள அனைவரையும் இயக்குனர் மாற்றி இருக்கிறார்.. முதல் பாகத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைத்திருந்தார்.. தற்போது கட்டா குஸ்தி இரண்டாம் பாகத்திற்கு சான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.. மேலும் கேமராமேன் எடிட்டர் உள்ளிட்டோரையும் மாற்றி உள்ளார்..
சமீபத்தில் இந்த படத்தில் இடம்பெற்ற சம்பவக்காரி என்ற பாடல் வெளியாகி இணையத்தில் வைரலானது..
தற்போது படக்குழுவினர் தீவிரமாக ப்ரொமோஷன் பணிகள் ஈடுபட்டு வருகின்றனர்.. ஜூலை 3ம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது..
கட்டா குஸ்தி 2 படத்தை பற்றி விஷ்ணு விஷால் பேசும்போது..
ஹவுஸ் வைஃப் போல இந்த படத்தில் ஹவுஸ் ஹஸ்பண்டாக நடித்திருக்கிறேன்.. வேலைக்கு போகாமல் வீட்டு வேலைகளை அனைத்தையும் செய்யும் பொறுப்பான கணவராக நடித்திருக்கிறேன்.. இப்போது காலம் மாறி இருக்கிறது… பெண்கள் வேலைக்கு செல்கிறார்கள்.. கணவர்மார்கள் வீட்டை கவனித்துக் கொள்கிறார்கள்..
என் மனைவியாக நடித்துள்ள ஐஸ்வர்யா விளையாட்டு வீராங்கனையாக நடித்துள்ளார்.. எங்களின் குழந்தையாக சாரா என்ற குழந்தை நட்சத்திரம் நடித்துள்ளார்..
பொதுவாக என்னுடைய படங்களில் இரண்டாம் பாகம் உருவாக வேண்டும் என்று நான் நினைப்பேன்.. முண்டாசுப்பட்டி இன்று நேற்று நாளை, ராட்சசன்… ஆனால் எந்த படமும் இதுவரை முடிவுக்கு வரவில்லை.. ஆனால் தற்போது கட்டா குஸ்தி 2 உருவாகியுள்ளது..
எனக்கு நகைச்சுவை படங்கள் அதிகம் பிடிக்கும் எனவே இது இந்த படம் கட்டா குஸ்தி 2 வெளி வருவது எனக்கு மிக்க மகிழ்ச்சி..
ஹீரோயிnai முன்னிலைப்படுத்தி கதைக்களம் இருந்தாலும் எனக்கு சந்தோஷம்தான்.. எங்கள் வீட்டை பொருத்தவரை எனது தந்தை கஷ்டப்பட்டு ஒரு கட்டத்தில் காவல்துறை அதிகாரியாக உயர்ந்தார்.. அப்பொழுது பல இடங்களில் ட்ரான்ஸ்பர் கிடைக்கும்… அப்போது எல்லாம் எங்கள் அம்மா தான் குடும்பத்தை பொறுப்பாக கவனித்துக் கொண்டார்..

அதுபோல எனது அக்காவும் எங்களை பொறுப்பாக கவனித்துக் கொண்டார்.. எனவே தான் இந்த படத்தில் தயாரிப்பு பொறுப்பில் அவர் பெயரும் இணைந்து இருக்கிறது.. ( சுப்ரா & ஆரியன் ரமேஷ்)
என் மனைவி ஜுவாலா கட்ட ஒரு விளையாட்டு வீராங்கனை.. வீட்டில் கூட அவர் சண்டை போடும்போது அது விவாதம் போல இருக்காது.. ஏதோ ஒரு விளையாட்டு போட்டி போட நினைத்துக் கொள்வார்.. தான் முதலிடம் பெறவேண்டும் என்று அவர் பேசுவார்.. அதுபோல சில காட்சிகளும் இந்த படத்தில் இருக்கும் எனவேதான் டீசரில் சில வசனங்களும் இணைக்கப்பட்டது..
(பொம்பளைக்கு கணவனா இருக்குது கஷ்டம்… ஆனால் ஸ்போர்ட்ஸ் பொம்பளைக்கு கணவனா இருக்கிறது ரொம்ப ரொம்ப கஷ்டம்..)
என் மனைவியின் கேரக்டர் நாயகின் கேரக்டராக பிரதிபலிக்கும்.. கட்டா குஸ்தி முதல் பாதத்தில் இடைவேளையில் நீங்கள் எப்படி எல்லாம் ரசித்தீர்களோ அதுபோல இந்த படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் நீங்கள் ரசிக்க தகுந்த அனைத்து காட்சிகளும் இருக்கும்..
இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் என்னை அழைத்துப் பேசும்போது அவர் தயாரித்த படங்களிலேயே தற்போது இந்த படம் இதுவரை அவருக்கு லாபத்தை பெற்று பெற்று கொடுத்துள்ளது.. இது என்னுடைய தயாரிப்பில் பெரும் தொகை என்றும் அவர் தெரிவித்தார்.. ஒரு நாயகனாக எனக்கு இது மிகவும் மகிழ்ச்சி அளித்துள்ளது…
இவ்வாறு குறிப்பிட்டு பேசினார் விஷ்ணு விஷால்.
Vishnu Vishal and Aishwarya shares Gatta Kusthi 2 special

