ரஜினி ஆசியுடன் செய்வேன்.. தவெக-வினர் தற்குறிகள் அல்ல… புரியாத மீடியாக்களுக்கு (தெருநாய்) விளக்கம் – லாரன்ஸ்

ரஜினி ஆசியுடன் செய்வேன்.. தவெக-வினர் தற்குறிகள் அல்ல… புரியாத மீடியாக்களுக்கு (தெருநாய்) விளக்கம் – லாரன்ஸ்

 

ரஜினி ஆசியுடன் செய்வேன்.. தவெக-வினர் தற்குறிகள் அல்ல… புரியாத மீடியாக்களுக்கு (தெருநாய்) விளக்கம் – லாரன்ஸ்

 

ஒரு சில தினங்களுக்கு முன்பு நான் அரசியலுக்கு வரலாமா வேண்டாமா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் அவர்கள் சொன்னால் நான் அரசியலுக்கு வருவேன் இல்லையென்றால் சமூக சேவை மட்டும் செய்வேன் என்று இவர் வீடியோ பதிவிட்டு இருந்தார் நடிகர் ராகவா லாரன்ஸ்.

அதன்படி இன்று ஜூன் 14ஆம் தேதி அவரது வீட்டிற்கு முன்பு ரசிகர்கள் நூற்றுக்கணக்கானோர் திரண்டனர்.. அவர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் விரைவில் அரசியலுக்கு வருவேன் என அதிரடியாக தன் அரசியல் முடிவை அறிவித்துள்ளார் லாரன்ஸ்.

திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவேனா என்பது குறித்து ஓரிரு தினங்களில் விரைவில் அறிவிப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.. மேலும் அவர் செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்து பேசும்போது…

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. இதனால் தான் அரசியலுக்கு வரலாமா என மக்களிடம் கேட்டேன். அதில் என்ன தவறு. நான் இனி ஏதாவது பெரிய முடிவு எடுத்தால் மக்களிடம் கேட்டுத்தான் செயல்படுவேன்.

தவெக அரசின் ஒரு மாத கால செயல்பாடு மிகச் சிறப்பாக உள்ளது. கோயில்கள், பள்ளிகள் அருகில் இருந்த மதுக்கடைகளை மூடும் முடிவு பிடித்திருந்தது. கல்வித்துறை அமைச்சர், அறநிலையத்துறை அமைச்சரின் செயல்பாடுகள் நன்றாக உள்ளது.

புதிய அரசு அமைந்துள்ளது.. எனவே கொஞ்சம் கால அவகாசம் கொடுக்க வேண்டும்.

ஒரு வாடகை வீட்டுக்குச் சென்றாலே அங்கு பழக ஒரு மாதம் ஆகும். அந்த வீட்டில் எது பிரச்சினை, அந்தத் தெருவில் உள்ள நாய்களை எப்படி நமக்குப் பழக்கப்படுத்துவது என்பதை தெரிந்து கொள்ளவே காலநேரம் தேவை.

ஒரு நாய்க்கோ, ஒரு வாடகை வீட்டுக்கோ நேரம் தேவை என்றால், புதிதாக ஆட்சிக்கு வந்தவர்களுக்கும் கால அவகாசம் கொடுப்பது நல்லது என நான் நினைக்கிறேன்.

ரஜினியின் ஆசிர்வாதம் இல்லாமல் நான் எதையும் செய்வதில்லை. அவரின் ஆசியோடுதான் செய்வேன்.

அண்ணாமலை நன்றாக படித்தவர், அரசியல் புரிதல் உள்ளவர். அவரைப் போன்ற அரசியலுக்கு வருவது நல்லது.

தவெகவினரை தற்குறி என சொல்கிறார்கள். ஆனால் அவர்கள் தற்குறி இல்லை.. ஷார்ப்பான அம்புக்குறிகள்.

மக்களுக்கு யார் நல்லவர்கள் கெட்டவர்கள் எனத் தெரியும். நான் மக்களுக்கு உண்மையாக இருப்பேன்.

நான் பணம் சம்பாதிக்கவோ, வெறுப்பு அரசியல் செய்யவோ அரசியலுக்கு வரமாட்டேன். இப்போது நூறு பேருக்கு உதவி செய்தால், அரசியலுக்கு வந்தால் லட்சம் பேருக்கு உதவி செய்வேன்” என்றார்…

 

Actor Director Lawrence statement about his political entry

மேலும் அவர் மக்களை தெரு நாய்களுடன் ஒப்பிட்டுப் பேசுகிறார் என பலரும் சர்ச்சையை கிளப்பினர்.. (நாங்கள் அப்படி எதுவும் சொல்லவில்லை..)

தற்போது அதற்கும் விளக்கம் அளித்துள்ளார் லாரன்ஸ்.

——

புரிந்து கொள்ளாத ‘வில்லங்க’ மீடியாக்கள்..; விளக்கம் கொடுத்த லாரன்ஸ்

—–

எனது சமீபத்திய செய்தியாளர் சந்திப்பில் நான் கூறிய கருத்து தொடர்பாக ஏற்பட்டுள்ள தவறான புரிதலை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

நான் எப்போதும் எனது ரசிகர்களையும் பொதுமக்களையும் என் தாய்க்கு நிகராக மதித்து வந்துள்ளேன். ஆனால், நான் மக்களை நாய்களுடன் ஒப்பிட்டுப் பேசியதாக சிலர் தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானதும், தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதுமாகும்.

நான் கூறியதன் உண்மையான பொருள் என்னவென்றால், ஒருவர் புதிய வீட்டிற்கு குடியேறும்போது அங்குள்ள சூழல், அப்பகுதியில் வாழும் மக்கள் மற்றும் சுற்றுப்புறத்தைப் புரிந்துகொள்ள சிறிது காலம் தேவைப்படும் என்பதுதான். அதற்கு எடுத்துக்காட்டாக அப்பகுதியில் இருக்கும் நாய்களின் பழக்கவழக்கங்கள் பற்றியும் குறிப்பிட்டேன்.

நான் மதிக்கும் மக்களை, என் தாய்க்கு இணையாகக் கருதும் மக்களை, நாய்களுடன் ஒப்பிட்டுப் பேசும் அளவிற்கு மனமில்லாதவன் அல்ல. புதிய சூழலுடன் பழகுவதற்கு கால அவகாசம் தேவைப்படும் என்பதையே நான் கூறினேன்; எந்த இடத்திலும் மக்களை குறிப்பிட்டு அவ்வாறு பேசவில்லை.

எனவே, அனைவரும் முழு காணொளியையும் பார்த்து, நான் உண்மையில் என்ன கூறினேன் என்பதை சரியாகப் புரிந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

தொடர்ந்து எனக்கு அளித்து வரும் ஆதரவுக்கும் புரிதலுக்கும் மனமார்ந்த நன்றிகள்…