இசைஞானி 50 : இளையராஜா பிறந்தநாளில் மாபெரும் விழா.. நீலம் புக்ஸ் ஏற்பாடு

இசைஞானி 50 : இளையராஜா பிறந்தநாளில் மாபெரும் விழா.. நீலம் புக்ஸ் ஏற்பாடு

 

இசைஞானி 50 : இளையராஜா பிறந்தநாளில் மாபெரும் விழா.. நீலம் புக்ஸ் ஏற்பாடு

 

 

தமிழ் இசையின் வரலாற்றில் அழியாத தடம் பதித்த இசைஞானி இளையராஜா தனது இசைப் பயணத்தின் 50-ஆவது ஆண்டை எட்டியிருப்பது, இந்திய இசை உலகிற்கே பெருமை சேர்க்கும் ஒரு முக்கியமான மைல்கல்லாக பார்க்கப்படுகிறது..

அரை நூற்றாண்டுக்கும் மேலாக கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளுக்கு இசையாகவும், வாழ்க்கையின் பல தருணங்களுக்கு பின்னணி குரலாகவும் திகழ்ந்த அவரது சாதனையை கொண்டாடும் வகையில், நீலம் புக்ஸ் நிறுவனம் சிறப்பு நிகழ்வொன்றை நடத்தவுள்ளது..

கடந்த மூன்று ஆண்டுகளாக இளையராஜாவின் இசை மரபையும், அவரது கலைப் பங்களிப்புகளையும் பல்வேறு வடிவங்களில் மக்களிடம் கொண்டு சேர்த்து வரும் நீலம் புக்ஸ், இந்த ஆண்டும் அவரது இசைப் பயணத்தின் பொற்காலத்தை நினைவுகூரும் வகையில் பிரம்மாண்ட விழாவை ஏற்பாடு செய்துள்ளது..

இந்த சிறப்பு நிகழ்வு வருகிற ஜூன் 2ஆம் தேதி சென்னை எழும்பூரில் அமைந்துள்ள அரசு அருங்காட்சியக வளாகத்தில் நடைபெறவுள்ளது..

இசை ரசிகர்கள், இலக்கிய ஆர்வலர்கள், கலைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொள்ளும் வகையில் திட்டமிடப்பட்டுள்ள இந்த நிகழ்வு, ஒரு இசையமைப்பாளரை கொண்டாடும் நிகழ்வாக மட்டுமல்லாமல், ஒரு தலைமுறையின் நினைவுகளையும், கலாச்சார அடையாளத்தையும் வடிவமைத்த மேதையை கௌரவிக்கும் விழாவாக அமையும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்..

திரைப்பட இசை, நாட்டுப்புற இசை, மேற்கத்திய இசை மற்றும் செவ்வியல் இசை ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைத்து தனித்துவமான இசை மொழியை உருவாக்கிய இளையராஜா, பல தலைமுறைகளை தாண்டி ரசிகர்களின் இதயங்களில் இடம்பிடித்துள்ளார்…

அவரது இசை வெறும் பாடல்களாக இல்லாமல், மக்களின் வாழ்வின் ஓர் அங்கமாக மாறியுள்ள நிலையில், இந்த 50 ஆண்டுகால சாதனை விழா ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது..

இசையைத் தாண்டி ஒரு காலத்தையே வடிவமைத்த இசை மேதையின் அரிய பயணத்தை கொண்டாடும் இந்த நிகழ்வில், அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்று சிறப்பிக்குமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்…

நிகழ்ச்சியின் விரிவான தகவல்கள் மற்றும் சிறப்பு அம்சங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது..

 

Neelam books honours ilaiyaraaja on his birthday

 

 

—-