தனுஷ் – மமீதாவின் ‘கர’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவித்த படக்குழு
தனுஷ் – மமீதாவின் ‘கர’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவித்த படக்குழு
விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த மாதம் 30ந் தேதி வெளியான படம் ‘கர’.
இந்த படத்தில் மமிதா பைஜு, கே.எஸ். ரவிகுமார், கருணாஸ், ஜெயராம், பிருத்வி பாண்டியராஜன், சுராஜ் வெஞ்சரமூடு, எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர்.
ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்து இருந்தார்.
வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் 1990-களில் ராமநாதபுரத்தில் நடந்த வங்கிக் கொள்ளை பற்றிய கதைக்களத்துடன் உருவாகியுள்ளது. கிராமத்து கதைக்களத்தில் ஆக்சன் பாணியில் வெளியானது.
இந்த நிலையில், கர படத்தின் ஓடிடி ரிலீஸ் மே 28-ந்தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது..
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..
Dhanush Mamitha starring Kara movie OTT release date

