ஜூனியர் என்டிஆர் பர்த்டே : வீடியோ கிளிப்ஸில் வாழ்த்திய ‘டிராகன்’ படக்குழு

ஜூனியர் என்டிஆர் பர்த்டே : வீடியோ கிளிப்ஸில் வாழ்த்திய ‘டிராகன்’ படக்குழு

ஜூனியர் என்டிஆர் பர்த்டே : வீடியோ கிளிப்ஸில் வாழ்த்திய ‘டிராகன்’ படக்குழு

 

‘கே.ஜி.எப்’ புகழ் பிரசாந்த் நீல் இயக்கத்தில் ‘டிராகன்’ என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார் ஜூனியர் என்.டி.ஆர்,

இந்த படத்தில் நாயகியாக ருக்மணி வசந்த் நடிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ரவி பஸ்ரூர் இசை அமைக்கிறார்.

மேலும், ஜூனியர் என்டிஆர் வெறும் 20 நாட்களில் சிக்ஸ்-பேக் உருவாக்கியிருப்பதும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த படம் அடுத்த ஆண்டு 2027 ஜூன் 11ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது..

இந்த நிலையில், ஜூனியர் என்டிஆர் மே 19 தனது 43 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், டிராகன் படக்குழு ஜூனியர் என்டிஆர்-க்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது. இந்த கிளிம்ப்ஸ் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது..

NTR Birthday special Dragon movie Glimpse

 

 

 

 

 

Related articles