திரையரங்கில் வசூல் வேட்டையாடும் சூர்யா..; ‘கருப்பு’ படம் ₹ 147 கோடி கலெக்ஷன்

திரையரங்கில் வசூல் வேட்டையாடும் சூர்யா..; ‘கருப்பு’ படம் ₹ 147 கோடி கலெக்ஷன்

 

திரையரங்கில் வசூல் வேட்டையாடும் சூர்யா..; ‘கருப்பு’ படம் ₹ 147 கோடி கலெக்ஷன்

 

சூர்யா – த்ரிஷா – நட்டி நடராஜ் – ஆர் ஜே பாலாஜி ஆகியோர் நடிப்பில் உருவாகிய திரைப்படம் ‘கருப்பு’. இந்த படம் கடந்த மே 18ஆம் தேதி திரையரங்கில் வெளியானது.

ஆர் ஜே பாலாஜி RJB இயக்கிய இந்த படத்தை ட்ரீம் வாரிஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது.. சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்..

படம் வெளியாவதற்கு முன்பே இந்த படம் பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் எழுப்பி இருந்தது.

அதன்படி இந்த படம் வெளியாகி மூன்று நாட்களில் ₹ 147 கோடி வசூலித்து உள்ளதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்து போஸ்டர் வெளியிட்டுள்ளனர்.

 

இது சூரியா ரசிகர்கள் மத்தியில் புதிய உற்சாகத்தை எழுப்பி உள்ளது..

காரணம் இதற்கு முன்பு சூர்யா நடித்த கங்குவா மற்றும் ரெட்ரோ ஆகிய திரைப்படங்கள் போதுமான வரவேற்பை பெறவில்லை என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது..

 

கடந்த இரண்டு நாட்களாக சனி மற்றும் ஞாயிறு நாட்களில் திரையரங்கில் HOUSE FULL காட்சிகளாக உள்ளது.. மேலும்  கோடை விடுமுறை காலங்கள் என்பதால் இன்னும் வசூல் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது..

 

Suriya Trisha starrer Karuppu collection report

——–