அனைவரும் ‘திரு.மாணிக்கம்’ என்ற அற்புதமான படத்தை பார்க்கனும்..; சபாஷ் சமுத்திரக்கனி
ஒவ்வொரும் ‘திரு.மாணிக்கம்’ என்ற அற்புதமான படத்தை பார்க்கனும்..; சபாஷ் சமுத்திரக்கனி..
சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகி பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள படம் ‘திரு.மாணிக்கம்’
இந்தியில் பெரிய வெற்றி பெற்ற ராஷ்மி ராக்கெட் படத்தின் எழுத்தாளர் நந்தா பெரியசாமி இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்..
இதில், பாரதிராஜா, அனன்யா, நாசர், தம்பி ராமையா, இளவரசு, ஸ்ரீமன், வடிவுக்கரசி, கருணாகரன், சாம்ஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இப்படத்தில் விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.
ரேகா ரவிக்குமார், ஜிந்தா கோபாலகிருஷ்ண ரெட்டி, ராஜா செந்தில் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
சுகுமார் ஒளிப்பதிவு செய்ய ‘ஹரா’ படத்தின் எடிட்டர் குணா இந்த படத்திற்கு எடிட்டிங் செய்திருக்கிறார்.
இப்படத்தை ஜீ தமிழ் நிறுவனம், ஓடிடி மற்றும் சேட்டிலைட் உரிமையை வாங்கியிருக்கிறது. இப்படம் விரைவில், திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
மாநாடு, வலிமை, மார்க் ஆண்டனி போன்ற படங்களை விநியோகம் செய்த சுப்பையா பெரியசாமி இந்தப் படத்தை பாராட்டி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பாராட்டு மழை பொழிந்துள்ளார்..
அவரின் பதிவில்…
இந்த தசாப்தத்தில் நான் பார்த்த நேர்மையான மற்றும் சிறந்த திரைப்படங்களில் ஒன்று. ஒவ்வொரு மனிதனும் இந்த அற்புதமாக படத்தை பார்க்க வேண்டும்.
இந்தப் படத்தை விநியோகிப்பதில் முழு மனதுடன் மகிழ்ச்சி அடைகிறேன். சமுத்திரக்கனியின் பிரமாதமான நடிப்புக்கு என்னுடைய வாழ்த்துகள். நந்தா பெரியசாமி இப்படத்தை சிறப்பாக இயக்கிவுள்ளார். ஜிபிஆர்கே சினிமாஸ், நல்ல படத்தை தயாரித்துள்ளது’ என குறிப்பிட்டுள்ளார்.
Thiru Manickam got appreciation before release

