2K Love Story விழாவில் ராமராஜன் : ஜெயவீரிடம் படம் பண்ணலாமா நானே கேட்டேன் – சுசீந்திரன்
2K Love Story விழாவில் ராமராஜன் : ஜெயவீரிடம் படம் பண்ணலாமா நானே கேட்டேன் – சுசீந்திரன்
சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’2கே லவ் ஸ்டோரி’ (2k love story). இதில் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த அறிமுக நாயகன் ஜெயவீர் நடிக்கிறார்.. நாயகியாக மீனாட்சி கோவிந்தராஜன் முக்கிய வே டங்களில் இயக்குனர்கள் சிங்கம் புலி, முருகானந்தம் ஜி பி முத்து உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
மேலும் பால சரவணன், ஆண்டனி பாக்யராஜ், ஜெயபிரகாஷ், வினோதினி, சிங்கமுத்து மற்றும் பலர் நடித்துள்ளனர்.
கார்த்திக் நேத்தா பாடல்கள் எழுத சிட்டி லைட் பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சுப்ரமணியன் தயாரித்துள்ளார். வி.எஸ்.ஆனந்த கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.
திருமணத்தில் போட்டோ எடுக்கும் இளைஞர்கள் குழுவின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களே படத்தின் கதை..
பல படங்களில் வெற்றி கூட்டணி அமைத்த சுசீந்திரன் மற்றும் இமான் இந்தப் படத்திலும் இணைகின்றனர்.
‘2கே லவ் ஸ்டோரி’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது..
பொதுவாக ஒரு சினிமா விழா என்றால் இசை வெளியீட்டு விழா ட்ரைலர் வெளியீட்டு விழா என்ற பேனர் வைத்திருப்பார்கள்.. ஆனால் இந்த படத்தில் ஜெயவீரை கதாநாயகனாக அறிமுகம் என்ற வாசகமே இடம் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினருடன் நடிகர் ராமராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நாயகனை அறிமுகம் செய்து வைத்தார்.. ராமராஜன் நடித்த ஐந்து படங்களை தயாரித்தவர் இந்த படத்தின் தயாரிப்பாளர் ஆவார்.

நிகழ்ச்சியில் பேசிய சுசீந்திரன், “இந்த 2கே லவ் ஸ்டோரி என்னை நானே மீட்டெடுக்க உதவிய திரைப்படம்..
இப்படத்தின் ஹீரோவிடம் முதலில் ஒரு படம் பண்ணலாமா என்று நானே கேட்டேன். நான் முன்பு இயக்கிய நடிகர்களிடம் கூட அவ்வாறு கேட்டதில்லை. கதை எழுதிவிட்டு தொழில்நுட்ப கலைஞர்கள் இடம் கதை சொன்னேன். பிரேமலு மாதிரியான படமாக இது இருக்கும் என்றார்.. சூரி மற்றும் விஷ்ணு விஷால் ஆகிய நடிகர்களை நான் அறிமுகப்படுத்தியதில் பெருமை.. அதுபோல இந்த ஜெயவீர் ஹீரோவையும் அறிமுகம் செய்வதில் பெருமை.. இன்றும் சூரி என்னிடம் விசுவாசம் ஆக அதே அன்புடன் பாசமாக இருந்து வருகிறார். அதுபோல ஜெயவீரும் எத்தனை வருடங்கள் ஆனாலும் அதை விசுவாசத்துடன் இருப்பார் என நம்புகிறேன்.. இப்படம் கண்டிப்பாக ஹிட்டாகும்” என்றார்..
சிறப்பு விருந்தினர் ராமராஜன் பேசும் போது…
சுசீந்திரனுக்காக இங்கு வந்துள்ளேன். இப்போது எல்லோரும் சொல்வது ’2கே கிட்ஸ்’ என்ற வார்த்தை தான். எப்போதும் காதல் கதைகள் சினிமாவில் நன்றாக ஓடும். காதல் என்பது நமது மனதை விட்டு அகலாத ஒன்று.. காதல் கதைகள் எப்போதும் நன்றாக ஓடும்.. சுசீந்திரன் படத்தில் ஏதாவது காதல் விஷயங்கள் கண்டிப்பாக இருக்கும்.. ” என்றார்..
Ramarajan as Chief guest in 2K Love Story launch


