கௌசல்யாவை ரசித்து ஜொள்ளு விட்டேன்..; ‘மனிதன் தெய்வமாகலாம்’ இசை விழாவில் செல்வராகவன்
கௌசல்யாவை ரசித்து ஜொள்ளு விட்டேன்..; ‘மனிதன் தெய்வமாகலாம்’ இசை விழாவில் செல்வராகவன் பேச்சு
டிரிப், தூக்குத்துரை ஆகிய படங்களின் இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’.
விஒய்ஓஎம் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் இயக்குநர் செல்வராகவன் நாயகனாக நடித்துள்ளார். மேலும் குஷி ரவி, ஒய்ஜி மகேந்திரன், கவுசல்யா, கவுசி ரவி, மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்..
ஏ.கே. பிரியன் இசையமைத்துள்ள இந்த படத்துகுக ரவி வர்மா. கே ஒளிப்பதிவு செய்துள்ளார். தீபக் படத்தொகுப்பு செய்கிறார். உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது..
இந்தப் படத்தின் `தங்க ரத்தினமே,’ `கலங்காதே ராசாவே’, பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இயற்கையும், அமைதியும் சூழ்ந்த கிராமத்தில் நிகழும் பெரும் சோகம் அதன் ஒற்றுமையை சிதைக்கிறது. அதனைத் துடைத்தெறிய மக்கள் மனவலிமையில் போராடும் நாயகன், தனது கிராமத்தைக் காப்பாற்ற எடுக்கும் தீர்மானம், அவனை அங்கு தெய்வமாக உயர்த்துகிறது..
‘மனிதன் தெய்வமாகலாம்’ திரைப்படம் வருகிற 10-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது..
‘மனிதன் தெய்வமாகலாம் படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். அந்த வகையில், செல்வராகவன் இந்த நிகழ்ச்சியில் பேசும் போது, “இந்தப் படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் அசுரத்தனமாக உழைத்தனர்.
அவர்கள் எப்போது தூங்குவார்கள், சாப்பிடுவார்கள் என்பது கூட தெரியாத அளவிற்கு கடும் உழைப்பாளிகள். இவர்களைப் பார்த்து நான் இப்படியும் படம் எடுக்கலாம் என்று கற்றுக் கொண்டேன். படத்தில் நடித்துள்ள நடிகை கௌசல்யாவை பார்த்து ஒரு காலத்தில் நானே ரசித்து “ஜொள்ளு” ஊத்தி இருக்கிறேன். இப்பொழுது அருகிலேயே இந்த நிகழ்ச்சியில் அமர்வது கூட சற்று நெகிழ்ச்சியாக இருக்கிறது,” என்றார்.
I admire Kowsalya lot says Selvaragavan


