முழு குடும்பமும் கடன் வாங்கியிருக்காங்க.. சொத்து மதிப்பு ₹620 கோடி.? விஜய் வேட்பு மனு முழு விவரம்
முழு குடும்பமும் கடன் வாங்கியிருக்காங்க.. சொத்து மதிப்பு ₹620 கோடி.? விஜய் வேட்பு மனு முழு விவரம்
தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை ஆரம்பித்த நடிகர் விஜய் முதல்முறையாக விரைவில் நடைபெற உள்ள 2026 சட்டமன்ற தேர்தலில் அரசியல் களம் காண்கிறார்.
முதல் தேர்தலிலே இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.. அதன்படி சென்னை பெரம்பூர் தொகுதியிலும் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளிலும் போட்டியிடுகிறார்.
இன்று மார்ச் 30 ஆம் தேதி சென்னை பெரம்பலூரில் வேட்பு மனு தாக்கல் செய்து தன் சொத்து விவரங்களை அதிகாரியிடம் சமர்ப்பித்தார்.. மேலும் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டார்.. வில்லிவாக்கத்தில் போதிய பாதுகாப்பு இல்லாத காரணத்தால் அங்கு நடைபெறுகிற பிரச்சாரத்தை ரத்து செய்தார் விஜய்.
விஜய் சமர்ப்பித்துள்ள சொத்து விவரங்கள் பட்டியல் இதோ..
விஜய் லயோலா கல்லூரியில் பி.எஸ்.சி. படிப்பை முடிக்காமல் இடையில் நின்றுவிட்டார் என்று வேட்பு மனுவில் தகவல் தெரிவித்துள்ளார்..
விஜய்க்கு ரூ.404.58 கோடி அசையும் சொத்து உள்ளது, விஜய்யின் அசையா சொத்துகள் மதிப்பு ரூ.220.15 கோடி.
தன் பெயரில் குற்றவியல் வழக்குகள், தண்டனை பெற்ற வழக்குகள் எதுவும் இல்லை.
விஜய் ஐந்துக்கு மேற்பட்ட கார்கள் வைத்திருப்பதாகவும் அதன் மதிப்பு மட்டும் ₹8 கோடி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..
கடந்த 5 ஆண்டுகளில் விஜய்யின் மொத்த வருமானம் ரூ.734.45 கோடி.
தனி நபர்கள், நிறுவனங்களுக்கு சுமார் ரூ.76 கோடி கடன் வழங்கியுள்ளார் விஜய்..
விஜய்யின் மனைவி சங்கீதா பெயரில் ரூ.15.51 கோடி அசையும் சொத்து..
மனைவி வசம் ரூ.4.07 கோடியில் 3,132 கிராம் தங்கம், ரூ.1 கோடி மதிப்பில் 134.91 காரட் வைரம் இருப்பு..
மகன், மகள் வங்கி கணக்கில் ரூ.4 லட்சம்
பூர்வீக சொத்தின் மதிப்பு ரூ.21.83 கோடி.
விஜய்யின் வங்கி கணக்கில் ரூ.220 கோடி
மனைவி சங்கீதாவின் வங்கி கணக்கில் ரூ.10.43 கோடி உள்ளது
விஜய்யின் கையில் ரூ.2 லட்சம் ரொக்கம்
விஜய்யிடம் ரூ.15 லட்சம் மதிப்புள்ள வெள்ளி, ரூ.1.20 கோடி மதிப்பிலான தங்கம் உள்ளது. விஜய் மனைவியிடம் 2 கிலோ வெள்ளி, ரூ.4 கோடி மதிப்பிலான தங்கம், ரூ.1 லட்சம் ரொக்கம் உள்ளது.
நடிகரும் தமிழக வெற்றி கழக கட்சி தலைவருமான விஜய் இடம் கடன் வாங்கியவர்கள்:
மகன் சஞ்சய் 8.78 லட்சம்
மகள் திவ்யா 4.60 லட்சம்
மனைவி சங்கீதா 12.6 கோடி
அம்மா சோபா 87 லட்சம்
அப்பா எஸ் ஏ சந்திரசேகர் 3 கோடி
தவெக பொதுச்செயலாளர் ஆனந்திடம் ₹3 கோடி கடன் கொடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
TVK Leader Vijay nominated in election and his assets details



