10 நாட்களில் ₹ 50 கோடி வசூல்.. ‘தாய் கிழவி’-யின் தரமான சம்பவம்

10 நாட்களில் ₹ 50 கோடி வசூல்.. ‘தாய் கிழவி’-யின் தரமான சம்பவம்

 

10 நாட்களில் ₹ 50 கோடி வசூல்.. ‘தாய் கிழவி’-யின் தரமான சம்பவம்

 

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா முதன்மை பாத்திரத்தில் நடித்த திரைப்படம் ‘தாய்க் கிழவி’.. அறிமுக இயக்குனர் சிவக்குமார் முருகேசன் என்பவர் இயக்கிய இந்த படம் கடந்த பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி வெளியானது.

இப்படம் வெளியான நாள் முதலே பத்திரிக்கையாளர்கள் மற்றும் பலரின் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது..

முதல் நாள் வசூல் குறைவாக காணப்பட்டாலும் அடுத்தடுத்த நாட்களில் படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்களும் வந்த நிலையில் தற்போது 50 கோடியை வசூலித்து பத்து நாட்களைக் கடந்துள்ளது.

இதனை அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்..

நடிப்பு : ராதிகா, அருள்தாஸ், பாலசரவணன், சிங்கம்புலி, முனிஸ்காந்த், ரேச்சல்

ஒளிப்பதிவு : விவேக் விஜயகுமார்

பாடலாசிரியர் : ஜெகன் கவிராஜ்

இசை : நிவாஸ் கே பிரசன்னா

தயாரிப்பு : எஸ்.கே.புரடக்ஷன்ஸ், பேஷன் ஸ்டூடியோஸ்

இயக்கம் : சிவகுமார் முருகேசன்

Thaai Kizhavi collected 50 crores in 10 days