ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிவைப்பு.. சென்சார் – ப்ரொடியூசர் – கோர்ட் வாக்குவாதம்..; முழு அலசல்
ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிவைப்பு.. சென்சார் – ப்ரொடியூசர் – கோர்ட் வாக்குவாதம்..; முழு அலசல்
விஜய் நடிப்பில் உருவான அவரது கடைசி படமான ‘ஜனநாயகன்’ திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9 ஆம் தேதி திரைக்கு வரும் என் அறிவிக்கப்பட்டது.
ஆனால் படத்தின் சென்சார் சர்டிபிகேட் சிக்கல் காரணமாக படத்தின் ரிலீஸ் ஒத்தி வைப்பதாக படக்குழு அறிவித்திருந்தது..
இதனடையில் நடந்தது என்ன என்பது பற்றி முழு விவரம் இதோ…
பெரும்பான்மை உறுப்பினர்கள் படத்துக்கு சான்று வழங்க பரிந்துரைத்துள்ளனர்; பெரும்பான்மை இல்லாவிட்டால்
மட்டுமே மறு ஆய்வு செய்ய முடியும்; ஒரு உறுப்பினர் எப்படி பெரும்பான்மை உறுப்பினர்களின் முடிவை செல்லாது என கூற முடியும் – சென்னை உயர் நீதிமன்றத்தில் படத் தயாரிப்பு நிறுவனம் தரப்பு வாதம்.
படத்தை முதலில் பார்த்த குழுவினர் ஒருமனதாக சான்று வழங்க முடிவு செய்தனர்; அதன் பின்னர் தனிப்பட்ட புகார் அளிக்க முடியாது – சென்னை உயர் நீதிமன்றத்தில் பட தயாரிப்பு நிறுவனம் வாதம்.
இந்த விவகாரத்தில் எந்த உள்நோக்கமும் இல்லை; எங்கள் அதிகாரத்தை கட்டுப்படுத்த முடியாது – சென்சார் போர்டு.
மறு ஆய்வுக் குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளது;
விரைவில் மறு ஆய்வு செய்யப்படும் – சென்சார் போர்டு.
சில காட்சிகளை நீக்கினால் சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவித்த பின்னரும் கூட படத்தை மறு ஆய்வுக்கு அனுப்ப அதிகாரம் உள்ளது – சென்னை உயர் நீதிமன்றத்தில் தணிக்கை வாரியம் பதில்.
படத்தை மறு ஆய்வுக்கு அனுப்ப சென்சார் போர்டு தலைவருக்கு அதிகாரம் உள்ளது – சென்சார் போர்டு
புகார் அளித்தவரே பேனலில் இருந்த ஒருவர்தான்; U/A சான்றிதழ் ஒப்புதல் அளித்த குழுவில் இருந்த நபரே எப்படி தனி புகார் அளிக்க முடியும்? – நீதிபதி கேள்வி
பதில் மனுத்தாக்கல் செய்ய அனுமதித்தால் நீதிமன்றம் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் முழுமையான பதில் அளிக்கப்படும் – தணிக்கை வாரியம்.
எனது ஆட்சேபங்கள் பரிசீலிக்கப்படவில்லை என்று மட்டுமே புகாரில் கூறப்பட்டுள்ளது. அந்த புகார் நிலைக்கத்தக்கதல்ல – நீதிபதி.
படத்தை மறு ஆய்வுக்கு அனுப்ப சென்சார் போர்டு தலைவருக்கு அதிகாரம் உள்ளது – சென்சார் போர்டு
திரைப்படத்தில் பாதுகாப்புப் படைகளில் சில சின்னங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், எனவே பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த நிபுணர்களிடம் ஆலோசனை பெற்றிருக்க வேண்டும் – சென்சார் போர்டு தரப்பு..
சென்சார் வாரியம் என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.. விஜய் சமீப காலமாக மத்திய அரசு பிஜேபி அரசு கடுமையாக விமர்சித்து வருவதால் விஜய் படத்திற்கு சிக்கல் ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது..
இதன் முன்னிட்டு காங்கிரஸ் கட்சி விஜய்க்கு ஆதரவாக களம் இறங்கியுள்ளது.. விஜய் என்ற அரசியல்வாதியை எதிர்க்கலாம் ஆனால் விஜய் என்று நடிகரை எதிர்க்க கூடாது என பல்வேறு கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது..
மேலும் நடிகர்கள் தரப்பில் ஜெயம் ரவி சிலம்பரசன் உள்ளிட்டர் விஜய்க்கு ஆதரவாக களம் இறங்கியுள்ளனர்..
கோட்ட தீர்ப்பு வரை Tvk சார்பில் எந்த அறிவிப்பு வெளியாக கூடாது.. எந்த எதிர்ப்பு குரலும் வரக்கூடாது என விஜய் கட்டளையிட்டுள்ளதாக கூறப்படுகிறது..
‘ஜனநாயகன்’ சென்சார் பிரச்சனை குறித்த சென்னை ஹைகோர்ட் தீர்ப்பு ஜனவரி 9ஆம் தேதி காலை 10:30 மணி அளவில் வெளியாகும் என தெரிய வந்துள்ளது
Jana Nayagan Politics – Censor issue and Court Judgement
——-

