அருண் விஜய்யின் ‘ரெட்ட தல’-க்கு U/A.. ரசிகர்களை கவர்ந்த தனுஷின் ‘கண்ணம்மா..’ பாடல்
அருண் விஜய்யின் ‘ரெட்ட தல’-க்கு U/A.. ரசிகர்களை கவர்ந்த தனுஷின் ‘கண்ணம்மா..’ பாடல்
‘தடம் ‘ படத்திற்கு பிறகு மீண்டும் அருண் விஜய் இரு வேருடங்களில் நடித்துள்ள திரைப்படம் ‘ரெட்ட தல’.
மான் கராத்தே & கெத்து ஆகிய படங்களை இயக்கிய கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகி உள்ளது.. ‘ இதில் அருண் விஜய், தான்யா ரவிச்சந்திரன், சித்தி இத்னானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பிடிஜி யுனிவர்சல் நிறுவனம் தயாரிக்க சாம்.சி.எஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்..
‘ரெட்ட தல’ படம் அடுத்தடுத்த திருப்பங்களுடன் உருவாகியுள்ளது… ‘கண்ணம்மா’ பாடலை தனுஷ் பாடியிருந்தார். இந்தப் பாடல் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது..

படத்தின் பிரமோசன் பணிகளுக்காக படக்குழுவினர் தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகின்றனர்.. இடையில் கோயில்களில் சென்றும் படத்தின் வெற்றிக்காக வழிபாடு மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், சென்சார் தணிக்கை வாரியம் ‘ரெட்ட தல’ படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. இப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 25ஆம் தேதி வெளியாகிறது..
Arun Vijay in dual role Retta Thala movie censored U/A

