FANLY APP – அனிருத்துக்கு பர்ஃபெக்ட்.. எனக்கு Worship வேண்டாம்… – சிவகார்த்திகேயன்

FANLY APP – அனிருத்துக்கு பர்ஃபெக்ட்.. எனக்கு Worship வேண்டாம்… – சிவகார்த்திகேயன்

FANLY APP – அனிருத்துக்கு பர்ஃபெக்ட்.. எனக்கு Worship வேண்டாம்… – சிவகார்த்திகேயன்

 

 

Fanly Entertainment App இன்று டிசம்பர் 1 தேதி சென்னை வடபழனியில் உள்ள கிரீன் பார்க் நட்சத்திர ஹோட்டலில் ஆரம்பிக்கப்பட்டது.

இதில் உலகச் சாம்பியன் குகேஷ் & நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்..

இந்த நிகழ்ச்சியில் இறுதியாக சிவகார்த்திகேயன் பேசும்போது…

எல்லோருக்கும் வணக்கம்.. என்னுடைய வணக்கத்திற்கு வணக்கம் சொன்ன அந்த ஒரு நபருக்கு மட்டும் நன்றி..

இங்கு என்னுடன் மேடையில் அமர்ந்திருப்பவர்கள் அனைவருக்கும் மூளை ரொம்ப அதிகம். இந்த நால்வரில் எனக்கு மூளை ரொம்ப கம்மி.. அதனால்தான் நடிகராக இருக்கிறேன் ஒருவேளை மூளை அதிகமாக இருந்தால் நிறைய கேள்விகள் கேட்டு அவரை டார்ச்சர் செய்து இருப்பேன்..

என் ரசிகர்கள் என்னை worship செய்ய வேண்டாம்.. அவர்கள் கடவுளையும் அவர்கள் பெற்றோர்களையும் வணங்கட்டும்.. என் ரசிகர்களுடன் நான் எப்போது நட்பாக இருக்க விரும்புகிறேன்.. அதனால்தான் அவர்களை சகோதர சகோதரிகளாகவே அழைக்கிறேன்.. அவர்கள் ஒருவனாக இருக்கவே விரும்புகிறேன்..

நான் சோசியல் மீடியாவில் ஆர்வம் காட்டுவதில்லை.. அதில் நிறைய வதந்திகள் இருக்கிறது.. இன்ஸ்டாகிராம் மட்டும் எப்போதாவது பயன்படுத்த்துவேன்.. என் நண்பன் நவநீதன் என் சோசியல் மீடியா அக்கவுண்டுகளை பார்த்துக் கொள்கிறார்.. ஒரு முறை ஏதாவது செய்து விட்டாயா என்று கேட்பான்.. இல்லை என்று சொன்னால் நீ எதையும் செய்யாதே என்பார்.. அவரே எல்லா பார்த்துக் கொள்வார்..

இந்த Fanly என்ற வார்த்தையை பார்க்கும் போது ஃபேமிலி என்று தோன்றுகிறது.. இது ஒரு நல்ல என்டர்டைன்மென்ட் ஆப்.. இதன் மூலம் சினிமா நடிகர்கள் மட்டுமில்லாமல் விளையாட்டு வீரர்கள் அனைவரிடம் ரசிகர்கள் தொடர்பில் இருக்கலாம்.. இப்போது குகேஷ் எடுத்துக் கொண்டால் அவரிடம் பேசிக் கொண்டிருக்கும்போது அவரது டைம் மேனேஜ்மென்ட் பற்றி கேட்டேன்.. இதுபோல ரசிகர்களும் அவரைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்..

இது அனிருத்துக்கு பர்ஃபெக்ட்டாக இருக்கும்.. காரணம் அவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.. அவர்தான் youtube இல் ஒரு வீடியோக்களை எனக்கு காண்பிப்பார்.. நிச்சயம் இந்த வீடியோவும் அவர் பார்த்து இருப்பார்..”

இவ்வாறு இந்த நிகழ்ச்சியில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசினார்..

Im not brilliant – Sivakarthikeyan speech at Fanly App launch

 

 

 

 

Related articles