டிசம்பர் இறுதியில் கலக்கும் கோலிவுட்.. : 18-ல் – LIK..;. 25-ல் ‘ரெட்ட தல & கொம்பு சீவி’
டிசம்பர் இறுதியில் கலக்கும் கோலிவுட்.. : 18-ல் – LIK..;. 25-ல் ‘ரெட்ட தல & கொம்பு சீவி’
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவான திரைப்படம் ”லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (எல்.ஐ.கே)..
இதில், எஸ்.ஜே. சூர்யா, கீர்த்தி செட்டி, சீமான் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்..
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு மலேசியா, சிங்கப்பூர் பகுதிகளில் நடைபெற்றது.
பேன்டஸி காதல் கதைக்களத்தில் உருவான இப்படம் வருகிற டிசம்பர் 18ந் தேதி வெளியாக உள்ளது..

—
ரெட்ட தல படம் டிசம்பர் 18ல் ரிலீஸ் என முன்பு அறிவிக்கப்பட்டது.. ஆனால் இப்போது கிறிஸ்துமஸ் வெளியீடாக ‘ரெட்ட தல’ வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
பிடிஜி யுனிவர்சல் நிறுவனத்தின் 3-வது தயாரிப்பாக ‘ரெட்ட தல’ உருவாகி இருக்கிறது.
திருக்குமரன் இயக்கிய ஸ்டைலிஷ் ஆக்ஷன் படத்தில் அருண் விஜய் இரண்டு கேரக்டரில் நடித்துள்ளார்.
இதில் அருண் விஜய், சித்தி இத்னானி, தான்யா ரவிச்சந்திரன், ஹரீஷ் பேரடி, யோகேஷ் சாமி, ஜான் விஜய், பாலாஜி முருகதாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்..
ஒளிப்பதிவாளராக டிஜோ டாமி, இசையமைப்பாளராக சாம் சிஎஸ், எடிட்டராக ஆண்டனி ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.
www.rightnewsraja.com

பொன்ராம் இயக்கத்தில் விஜயகாந்தின் இளைய மகனான சண்முக பாண்டியன் நடிப்பில் வெளியாக உள்ள படம் ‘கொம்புசீவி’.
இதில் சரத்குமார், காளி வெங்கட், கல்கி ராஜா ஆகியோர் நடித்துள்ளனர்.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்துக்கு பால சுப்ரமணியன் ஒளிப்பதிவு மேற்கொண்டுள்ளார்..
இந்த படம் டிசம்பர் 25ல் கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியாகிறது.
Lik and Retta Thala and Kombu Seevi movie release date updates

