1000 விமர்சனங்கள்… ஆனாலும் ₹500 கோடி வசூல்.. ரஜினிக்காக நடந்துச்சி… – ‘கூலி’ குறித்து லோகேஷ்

1000 விமர்சனங்கள்… ஆனாலும் ₹500 கோடி வசூல்.. ரஜினிக்காக நடந்துச்சி… – ‘கூலி’ குறித்து லோகேஷ்

 

1000 விமர்சனங்கள்… ஆனாலும் ₹500 கோடி வசூல்.. ரஜினிக்காக நடந்துச்சி… – ‘கூலி’ குறித்து லோகேஷ்

 

பா.இரஞ்சித்தின் ‘மார்கழியில் மக்களிசை’ அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது..

இதில் கனிமொழி எம்.பி, லோகேஷ் கனகராஜ், ஜி.வி.பிரகாஷ், வெற்றிமாறன் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள்..

அந்த நிகழ்வு முடிந்தபின் பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசினார் லோகேஷ் கனகராஜ்..

அப்போது… “கூலி’ முடிந்தவுடன் எந்தவொரு பேட்டியும் கொடுக்கவில்லை. அடுத்த படத்தின் வேலைகளில் பிஸியாக இருந்தேன். மக்களுக்கு நன்றி தெரிவிக்க மேடை கிடைக்கவில்லை..

’கூலி’ படத்தின் மீது 1000 விமர்சனங்கள் இருந்தது… விமர்சனங்களை ஏற்றுக் கொள்ள தான் வேண்டும்..

அடுத்த படத்தில் அதனை தவிர்ப்பதற்கான பணிகளில் தான் ஈடுபடப் போகிறேன். அனைத்து விமர்சனங்களையும் கடந்து ரஜினி சாருக்காக மக்கள் திரையரங்கில் போய் படத்தைப் பார்த்தார்கள். தயாரிப்பாளரிடம் கேட்டபோது அப்படம் ரூ.500 கோடி வசூல் செய்ததாக தெரிவித்தார்.

அதற்குக் காரணமான மக்களுக்கு நன்றி. அதற்கு உறுதுணையாக இருந்த அனைத்து தரப்பினருக்கும் நன்றி. எனது அடுத்த படம் குறித்து தயாரிப்பு நிறுவனம் விரைவில் அறிவிக்கும்” என தெரிவித்தார் லோகேஷ்..

 

1000 critics about Coolie but it Collected ₹500 says Lokesh Kanagaraj