AARYAN Updates : சென்சாரில் U/A.; ட்ரெய்லரில் அசத்தும் விஷ்ணு விஷால்

AARYAN Updates : சென்சாரில் U/A.; ட்ரெய்லரில் அசத்தும் விஷ்ணு விஷால்
விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஆர்யன்’.
இப்படத்தை அறிமுக இயக்குனரான பிரவீன் இயக்க இந்த பட நாயகன் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் சார்பாக தயாரித்துள்ளார்..
இதில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், வாணி போஜன் மற்றும் செல்வராகவன் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்..
‘ஆர்யன்’ படத்தின் முதல் பாடல் ‘கொல்லாதே கொள்ளை அழகாலே’ பாடலை வாமனா வரிகளில் ஜிப்ரான், குரு ஹரிராஜ் ஆகியோர் பாடியுள்ளனர்.. இந்தப் பாடல் ஏற்கனவே வெளியானது.
‘ஆர்யன்’ படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்தநிலையில் ‘ஆர்யன்’ படத்திற்கு தணிக்கையில் ‘யு/ஏ’ சான்றிதழ் கிடைத்துள்ளது.
ஆர்யன்’ படம் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வருகிற அக்டோபர் 31ம் தேதி வெளியாகிறது..
Vishnu Vishal starrer Aaryan censored UA