மோகனை அடுத்து சுரேஷுக்கும் ரீ-என்ட்ரீ தரும் விஜய் ஸ்ரீ.: ஆல்ரெடி அனித்ராவும் இவிடே உண்டு

மோகனை அடுத்து சுரேஷுக்கும் ரீ-என்ட்ரீ தரும் விஜய் ஸ்ரீ.: ஆல்ரெடி அனித்ராவும் இவிடே உண்டு
‘தாதா 87’ திரைப்படத்தில் சாருஹாசனையும், ‘பவுடர்’ படத்தில் நிகில் முருகனையும், ‘ஹரா’ படத்தில் நீண்ட இடைவெளிக்கு பின் மோகனையும் நடிக்க வைத்தார் இயக்குநர் விஜய்ஶ்ரீ ஜி..
தற்போது இன்னுமொரு முற்றிலும் மாறுபட்ட முயற்சியாக ‘பன்னீர் புஷ்பங்கள்’ மூலம் 80களில் ரசிகர்கள் இதயங்களில் இடம் பிடித்த சுரேஷை தனது புதிய படத்தின் மூலம் மறு அறிமுகம் செய்கிறார் விஜய்ஶ்ரீ ஜி.
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம் ஒரு பரபரப்பான கதையை பின்னணியாக கொண்டதாகும். மலேசியாவை சேர்ந்த ஜி வி இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் டத்தோ கணேஷ் மற்றும் விஷால் ஆகியோர் பிரம்மாண்ட பொருட்செலவில் இப்படத்தை தயாரிக்கின்றனர்..
சுரேஷை தொடர்ந்து முக்கிய வேடத்தில் மலேசிய ரஜினி என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் டத்தோ கணேஷ், அனித்ரா நாயர், தீபா, மொட்டை ராஜேந்திரன், சிங்கம் புலி உள்ளிட்டோர் இந்த திரைப்படத்தில் நடிக்கின்றனர்.
விஜய் ஸ்ரீ இயக்கிய ‘பவுடர்’ மற்றும் ‘ஹரா’ உள்ளிட்ட படங்களில் மலையாள நடிகை அனித்ரா நாயர் நடித்திருந்தார்.. தற்போது இந்தப் படத்திலும் அனித்ரா இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது..
‘ஹரா’ புகழ் ரஷாந்த் ஆர்வின் இசை அமைக்கிறார்.
படப்பிடிப்பு விரைவில் தொடங்கி இந்தியா மற்றும் மலேசியாவில் நடைபெறவுள்ளது. இப்படத்தின் டைட்டில் டீஸர் ஏப்ரல் 19 அன்று மலேசியாவில் வெளியாகிறது. படத்தின் மீதான ஆர்வத்தை ரசிகர்கள் இடையே இது உருவாக்கும் என்று படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.
Vijay Sri brings Actor Suresh again in Kollywood