‘விஜய் ஆண்டனி 3.0’ இசை நிகழ்ச்சியை திடீரென ரத்து செய்த நடிகர்.. ஏன்.?

‘விஜய் ஆண்டனி 3.0’ இசை நிகழ்ச்சியை திடீரென ரத்து செய்த நடிகர்.. ஏன்.?
இன்று டிசம்பர் 28ஆம் தேதி சென்னையில் ‘விஜய் ஆண்டனி 3.0’ என்ற பெயரில் ஏஎம் ஜெயின் கல்லூரி மைதானத்தில் இசை நிகழ்ச்சி நடைபெறவிருந்தது..
ஆனால் தமிழக காவல்துறையின் அறிவுரையின் பேரில் இந்த நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக திடீரென அறிவிக்கப்பட்டது..
இதுபற்றி விஜய் ஆண்டனி வெளியிட்ட பதிவில்..
‛‛வணக்கம் நண்பர்களே. சில எதிர்பாராத காரணங்களாலும், தற்போது சென்னையில் நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும் அரசு அதிகாரிகள் வழங்கிய ஆலோசனையின் அடிப்படையில் இன்று நடைபெறவிருந்த விஜய் ஆன்டனி 3.0 இசை நிகழ்ச்சி வேறு ஒரு தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது.
இதனால் உங்களுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு மிகவும் வருத்தப்படுகிறேன். புதிய நிகழ்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும். உங்கள் புரிதலுக்கு நன்றி. புதிய நிகழ்வு பிரம்மாண்டமாக இருக்கும்” என குறிப்பிட்டுள்ளார்.
Vijay Antony 3 concert cancelled announcement