‘விடுதலை 2’ ரிலீசுக்கு முதல் நாள் 8 நிமிட காட்சிகளை வெட்டிய வெற்றிமாறன்

‘விடுதலை 2’ ரிலீசுக்கு முதல் நாள் 8 நிமிட காட்சிகளை வெட்டிய வெற்றிமாறன்
இளையராஜா இசையில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘விடுதலை’.
இந்தப் படத்தின் முதல் பாகம் வெற்றியடைந்த நிலையில் இரண்டாம் பாகம் நாளை டிசம்பர் 20ஆம் தேதி வெளியாக உள்ளது.
சூரி கதை நாயகனாக நடிக்க விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்க மஞ்சு வாரியார் நாயகியாக நடித்துள்ளார்.
“விடுதலை பாகம் 1” மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆனார் சூரி.. இந்த படத்தில், சூரி தனது உடல் எடையை குறைத்து அர்ப்பணிப்புடன் நடித்து பாராட்டுகளை பெற்றார்.
இத்துடன், “விடுதலை பாகம் 2” படத்தில் விஜய் சேதுபதி, தனது வாத்தியார் கேரக்டர் இளமைக் காலத்தை மையமாக கொண்டு நடித்துள்ளார். இப்படத்தில், விஜய் சேதுபதி 8 நாட்கள் கால்ஷீட் கொடுத்துவிட்டு, 120 நாட்கள் வரை படத்தில் பணியாற்றியுள்ளார்.
இளையராஜா இசையில் உருவான தினம் தினம் உன் நெனப்பு பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது..
இந்தப் படம் நாளை வெளியாக உள்ள நிலையில் ஒரு வீடியோ வெளியிட்டு இயக்குநர் வெற்றி மாறன்.. ” இதில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து, படத்தில் இருந்து 8 நிமிடங்கள் நீக்கப்பட்டதாக வீடியோவில் பகிர்ந்துள்ளார்.
Viduthalai 2 movie 8 minutes scenes trimmed says Vettrimaran