JUST IN ‘வீர தீர சூரன்’ விழாவில் ஆங்கராக மாறிய ரியா ஷிபு..; சிலிர்த்த ‘சியான்’ விக்ரம்

JUST IN ‘வீர தீர சூரன்’ விழாவில் ஆங்கராக மாறிய தயாரிப்பாளர் ரியா ஷிபு..; சிலிர்த்த ‘சியான்’ விக்ரம்
நடிகர் விக்ரம் நடிப்பில் அவரது 62 ஆவது படமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘வீர தீர சூரன் 2’..
இந்தப் படத்தை சித்தார்த் தயாரித்து நடித்த ‘சித்தா’ பட இயக்குனர் அருண்குமார் இயக்கியுள்ளார்.. சித்தா படத்திற்கு வெற்றிக்கு பிறகு அருண் இயக்கத்தில் வெளியாகவுள்ள படம் என்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அறிவிப்பு நாள் முதலே அதிகரித்து வந்தது.
‘வீர தீர சூரன்’ முதல் பாகமே வெளியாகாத நிலையில் திடீரென இந்த படம் இரண்டாம் பாகம் என அறிவிக்கப்பட்ட போது அதன் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகரிக்க தொடங்கியது..
வழக்கமாக முதல் பாகத்தை முதலில் வெளியிடுவது மட்டும்தான் சினிமா உலகின் ஃபார்முலாவாக இருந்து வந்த நிலையில் முதன் முதலாக படத்தின் பாகம் இரண்டை வெளியிட உள்ளது இந்த படக்குழு என்பது குறிப்பிடத்தக்கது.
தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ள இந்தப் படத்தை மிக பிரம்மாண்டமாக HR பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக ரியா சிபு என்பவர் தயாரித்துள்ளார். இவர் இளம் பெண் தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் நாயகியாக துஷாரா விஜயன் நடித்துள்ளார்.. எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, சித்திக் உள்ளிட்ட நடித்துள்ளனர்.
இந்த படம் அடுத்த வாரம் மார்ச் 27ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இன்று மார்ச் 20ஆம் தேதி இந்த படத்தில் இசை வெளியீட்டு விழா சென்னை ஆவடியில் வேல் டெக் என்ற பிரபல கல்வி நிறுவன வளாகத்தில் நடை பெற்று வருகிறது.
இந்தக் கல்லூரியின் ஆண்டு விழாவும் இத்துடன் இணைக்கப்பட்டு மிகப் பிரம்மாண்டமாக மாணவ – மாணவிகள் முன்னிலையில் நடைபெற்று வருகிறது.
இதனை முன்னிட்டு இந்த நிகழ்ச்சியை அபிஷேக் மற்றும் கிக்கி விஜய் இருவரும் தமிழக பாரம்பரியபடி வேஷ்டி சட்டை & பட்டுப் புடவையில் தொகுத்து வழங்கினர்.
கல்லூரி நிகழ்ச்சி முடிந்த பின்னர் ‘வீர தீர சூரன்’ பட இசை நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.. அப்போது முதன் முதலாக இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ரியா சிபுவை மேடை ஏற்றினர்.
‘வீர தீர சூரன்’ பட விநியோகஸ்தர்கள் பைவ் ஸ்டார் செந்தில் என்று ஆரம்பித்த இவர் ஒவ்வொரு தொழில்நுட்ப கலைஞரையும் வெகுவாக பாராட்டினார்.. மேலும் அவர் பார்ப்பதற்கு ஒரு கல்லூரி மாணவி போலவே இருப்பதால் மாணவர் மாணவிகள் மத்தியில் பெரும் உற்சாகம் தொற்றிக் கொண்டது..
கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் பார்வையாளர்கள தன் பேச்சால் கவர்ந்திருந்தார்.. அப்போது மேடையில் இருந்த தொகுப்பாளர்களே… ” எங்களுக்கு வேலையில்லாமல் செஞ்சிடுவீங்க போல என்ற புலம்பி தள்ளினர்.
மேலும் அவரது மேடைப்பேச்சு கேட்டு நடிகர் விக்ரம், மலையாள நடிகர் சுராஜ், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், SJ சூர்யா, துஷாரா உள்ளிட்ட பலரும் வியந்து பார்த்தனர்..
Veera Dheera Sooran Producer Riya Shibu ultimate speech..