விக்ரம் மிரட்டிய ‘வீர தீர சூரன்’ ஓடிடி ரிலீஸ் தேதி தெரிஞ்சிக்க வேண்டாமா.?

விக்ரம் மிரட்டிய ‘வீர தீர சூரன்’ ஓடிடி ரிலீஸ் தேதி தெரிஞ்சிக்க வேண்டாமா.?
சித்தார்த் நடிப்பில் உருவான ‘சித்தா’ படத்தை இயக்கி அருண்குமார் பெரும் எதிர்பார்ப்பு கிடையில் உருவாக்கிய திரைப்படம் ‘வீரதீர சூரன்’…
விக்ரம் மற்றும் எஸ் ஜே சூர்யா, துஷாரா விஜயன், மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு நடிப்பில் இந்த படம் உருவானபோது இது இரண்டாம் பாகமாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டது..
முதல் பாகம் வெளியாகாத நிலையில் இரண்டாம் பாகம் வெளியாவதால் கதை எப்படி செல்லும் என்ற கோணத்தில் பல ரசிகர்களும் காத்திருந்தனர்.. ஆனால் எந்தவித குழப்பமும் இல்லாமல் திரைக்கதையே அழகாக அமைத்திருந்தார் அருண்குமார்.
இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையும் இந்த படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
ரியா சிபு என்பவர் தயாரித்திருந்தார்.
இந்த படத்தின் ரிலீஸ் தேதி அன்று காலை இரண்டு காட்சிகள் ரிலீஸ் ஆகாமல் பிரச்சினையில் சிக்கியது.. ஆனால் மாலை முதல் வீரதீரசூரன் தமிழகமெங்கும் திரையிடப்பட்டது
ரசிகர்களின் ஆதரவுடன் ₹ 50 கோடி வசூலை கடந்து இன்னும் பல திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது.
இந்த நிலையில் இந்த வாரம் வருகிற ஏப்ரல் 24 அன்று அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாக உள்ளது.
Veera Dheera Sooran movie OTT release date news