வன்முறையின் மகா உருவம் ‘மார்கோ’ தமிழிலும் ரிலீஸ்.; உன்னிக்கு ராம் கோபால் பாராட்டு

வன்முறையின் மகா உருவம் ‘மார்கோ’ தமிழிலும் ரிலீஸ்.; உன்னிக்கு ராம் கோபால் பாராட்டு
மலையாள சினிமா என்றாலே அமைதியான சாந்தமான குடும்ப படங்களாக இருக்கும் என்ற பெயர் இந்திய அளவில் உண்டு. ஆனால் அதை எல்லாம் முறியடிக்கும் வகையில் வன்முறையின் ஒட்டுமொத்த உருவமாக ரத்தம் சொட்ட சொட்ட ‘மார்கோ’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது.. படத்தில் ஆக்ஷன் தெறிக்க தெறிக்க 7 சண்டை காட்சிகள் உள்ளன.
இந்த படத்தில் உன்னி முகுந்தன் ஹீரோவாக நடித்துள்ளார்… தமிழில் வெளியான கருடன் படத்தில் சசிகுமார் மற்றும் சூரி உடன் இணைந்து நடித்திருந்தார் உன்னி முகுந்தன் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தினை ஷரீஃப் முகமது தயாரிக்க ஹனீஃப் அதானி இயக்கியுள்ளார்..
Marco படம் கேரளாவில் மலையாளத்தில் சமீபத்தில் டிசம்பர் 20 இல் வெளியாகி வசூலில் மகா வேட்டையாடி வருகிறது.
எனவே இந்த படத்தை தெலுங்கு மற்றும் தமிழில் வெளியிட முடிவு செய்தார் உன்னி முகுந்தன்.
அதன்படி தெலுங்கில் 2025 ஜனவரி 1ம் தேதியும் தமிழில் ஜனவரி 3ஆம் தேதி வெளியிட உள்ளனர்.. தமிழில் ஏ பி இண்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.
இந்த நிலையில் இந்த படத்தையும் நடிகர் உன்னி முகுந்தன் நடிப்பையும் இந்தியாவின் பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மா வெகுவாக பாராட்டியுள்ளார்.
Unni Mukundan starring Marco tamil release date