ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் சபை UNEA தமிழ் நடத்திய ‘கடலில் பெருகும் நெகிழி குப்பைகள்’ கருத்தரங்கம்
ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் சபை UNEA தமிழ் நடத்திய ‘கடலில் பெருகும் நெகிழி குப்பைகள்’ கருத்தரங்கம்
ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் சபை UNEA தமிழ் நடத்திய “கடலில் பெருகும் நெகிழி குப்பைகள் அதனை உலகளாவிய முறையில் தடுக்கும் வழிமுறைகள் மற்றும் தீர்வுகள் எனும் தலைப்பில் நடத்திய கருத்தரங்கம்
நின்னைக்கரை அரசு நடுநிலைப்பள்ளி மாணவ மாணவியர் பங்கேற்பு
செங்கல்பட்டு மாவட்டம், மகரிஷி வித்யா மந்திர் அவிக்னாவில்
9 மற்றும் 10 ஆம் தேதிகளில் ஐக்கிய நாடுகளின் மாதிரி சபை ஆறாம் பதிப்பு நடைபெற்றது
இதில் பல்வேறு தனியார் பள்ளிகள் உட்பட மொத்தம் 17 குழுக்களில் 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்..

MVM – MUN ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் சபை UNEA தமிழ் நடத்திய “கடலில் பெருகும் நெகிழி குப்பைகள் அதனை உலகளாவிய முறையில் தடுக்கும் வழிமுறைகள் மற்றும் தீர்வுகள் “என்ற தலைப்பின் கீழ் இந்தியா, ரஷ்யா, பிரான்ஸ், ஜெர்மனி, மெக்சிகோ, சீனா, தென்னாப்பிரிக்கா, இலங்கை, ஸ்பெயின், தாய்லாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளாக கலந்துரையாடிய நின்னக்கரை
அரசு நடுநிலைப்பள்ளி 6ஆம் வகுப்பு தாருண்ணிகா, நித்திய ஸ்ரீ, 7ஆம் வகுப்பு பார்கவி, கிருத்திகா, பிரகதி, அக்சயா அபிஷேக்சர்மா 8ஆம்வகுப்பு ஆன்டனி யாதேஷ், சிவரஞ்சனி, கோமல்குமாரி
ஆகிய 10 பேர் பங்கேற்று விருதுகளும், சான்றிதழ்களும் பெற்றனர்.
இந்நிகழ்வில் பங்கேற்ற நின்னைக்கரை பள்ளி மட்டுமே ஒரே அரசு நடுநிலைப்பள்ளி .
பங்கேற்ற பிற பள்ளிகளெல்லாம் மேல்நிலைப்பள்ளிகள்
அவற்றில்
MBB அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி கிழக்கு தாம்பரம் அரசுப்பள்ளி தவிர்த்து
மற்றவை எல்லாம் தனியார் மேல்நிலைப் பள்ளிகள்
ஐக்கிய நாடுகளின் மாதிரி சபையின் தாரக மந்திரம் “அனைத்து தரப்பு மக்களின் குரல்களும் ஓங்கி உலகமெல்லாம் ஒலிக்க வழிவகை செய்வோம்”.
என உறுதி ஏற்றனர்..
ஆசிரியப் பிரதிநிதியாக நின்னைக்கரை தலைமை ஆசிரியர் சீனிசந்திரசேகரன்
ஆசிரியைகள்
பிரேமா, மகேஸ்வரி ஆகியோர் பங்கேற்றனர்..
UNEA conducted Plastic in Oceans meeting

